இரா. அசோகன்

எளிய தமிழில் VR/AR/MR 6. VR அசைவூட்டத்துக்குக் கட்டற்ற திறந்தமூலக் கருவிகள்

முப்பரிமாண அசைவூட்டம் (3D animation) 3D அசைவூட்டம் உருவாக்கும் செயல்முறையை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது மாதிரியமைத்தல் (modelling). முப்பரிமாணப் பொருட்களை அல்லது வடிவங்களை உருவாக்கி ஒரு காட்சியில் (scene) வைக்கிறோம். அடுத்து இடுவெளி (layout) மற்றும் அசைவூட்டம். இது காட்சியில் உருவங்கள் எவ்வாறு நகர்கின்றன மற்றும் திரும்புகின்றன போன்றவற்றைக் குறித்தல். கடைசியாக முழு அசைவூட்டத்தையும்…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 5. VR காணொளி உருவாக்கும் வழிமுறைகள்

VR காணொளி வடிவங்கள் (video formats) VR தலையணிகளில் தலையைத் திருப்பிப் பார்க்கும் போது பார்வைப் புலம் அதிகரிக்கிறது. சாதாரண காணொளிக் கருவிகளில் எடுத்த படங்கள் வேலைக்கு ஆகாது. ஆகவே VR காட்சிகளுக்காகவே பிரத்தியேகமான காணொளிக் கருவிகள் தேவை. பல வகைக் கருவிகள் சந்தையில் வந்துள்ளன. எம்மாதிரி வேலைக்கு எந்தக் கருவி தோதானது என்று அடுத்து…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 4. VR கோப்பு வடிவங்கள் (file formats)

முப்பரிமாணப் பொருட்களுக்கு OBJ கோப்பு வடிவம் OBJ கோப்பு வடிவம் 3D பொருட்களுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு எளிய தரவு வடிவமாகும். இது 3D வடிவவியலை மட்டுமே குறிக்கிறது. ஆகவே, இயக்கம் மற்றும் அசைவூட்டத்தைச் செய்ய இயலாது. இது திறந்தமூலக் கோப்பு வடிவம். ஆகவே பிற 3D வரைகலை செயலி நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன.  உரிமக் கட்டணம்…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 3. இணைய உலாவியிலேயே ஊடாடும் (interactive) 3D காட்சிகள்

தலையணி (headset) இல்லாமலும் ஊடாடும் 3D காட்சிகள் பார்க்க இயலும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகம் நாசா (NASA) செவ்வாய்க் கோளில் ரோவர் (Rover) என்ற ஊர்தியை இறக்கி ஆராய்ச்சி செய்தது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அது எடுத்த செவ்வாய்க் கோள் சுற்றுச்சூழல் காணொளிகளை ஊடாடும் காட்சியாக வெளியிட்டுள்ளார்கள். திறன்பேசியில் நம்முடைய விரல்களைப் பயன்படுத்தி, அல்லது கணினியில்…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 2. தோற்ற மெய்ம்மை (Virtual Reality – VR)

VR என்பது அனைத்து மூழ்கவைக்கும் மெய்நிகர் அனுபவங்களையும் உள்ளடக்கியது. புகழ்பெற்ற சுற்றுலா இடங்கள் போன்ற 360 பாகை முற்றிலும் மெய்யுலகக் காணொளியாகவும் (360 video) இருக்கலாம். அல்லது முற்றிலும் செயற்கையாக கணினியில் உருவாக்கிய 3D அசைவூட்டமாகவும் (animation) இருக்கலாம். அல்லது இவை இரண்டும் கலந்ததாகவும் இருக்கலாம். மூழ்கவைக்கும் அனுபவம் (immersive experience) மூழ்கவைக்கும் அனுபவம் என்றால்…
Read more

எளிய தமிழில் VR/AR/MR 1. மெய்ம்மை (Reality) வகைகள்

தோற்ற மெய்ம்மை (Virtual Reality – VR)  உங்களுக்கு சுற்றுலாவில் ஆர்வம் என்று வைத்துக்கொள்வோம். பாரிஸ் நகரத்திலுள்ள ஈபெல் கோபுரம் (Eiffel Tower) சென்று பார்த்தால் எவ்வாறு இருக்கும் என்று தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக உள்ளீர்கள். ஆனால் அங்கு சென்றுவருவதோ தற்போது உங்களுக்கு இயலாது. அவர்களுடைய 360 பாகைக் காணொளியை VR காட்சியாக வெளியிட்டுள்ளார்கள். ஒரு…
Read more

எளிய தமிழில் Computer Vision 27. பணியாளர் பாதுகாப்பும் உடல்நலனும்

கீழ்க்கண்ட வேலைகளுக்கு கணினிப் பார்வைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம்: அபாயகரமான பணியிடங்களில் தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் (PPE – Personal Protective Equipment) அணியவேண்டும் என்ற வழிமுறைகளைப் பின்பற்றுதல்.  அபாயகரமான வேதிப்பொருட்கள் (Chemicals) சரக்கு வைப்பு மற்றும் போக்குவரத்தைக் கண்காணித்தல்.  மீண்டும் மீண்டும் செய்யும் வேலைகளில் காயமடைவதைத் (repetitive injury) தடுக்க பணிச்சூழலியல் (Ergonomics) மதிப்பீடு. கட்டுமான…
Read more

எளிய தமிழில் Computer Vision 26. மேற்பரப்பு குறைபாடு சோதனை (surface defect inspection)

உலோக பாகங்களின் மேற்பரப்பு குறைபாடு சோதனை மேம்பட்ட 2D மற்றும் 3D மேற்பரப்பு குறைபாடு ஆய்வு அமைப்புகள் இந்த வேலைக்குப் பயன்படுகின்றன. குறிப்பாக உலோக பாகங்களின் பொருளிலோ அல்லது உற்பத்தியிலோ இருக்கும் ஒடுக்கங்கள் (dents), நுண்துளைகள் (pores), சில்லுகள் (chips), பொளிந்த வடுக்கள் (pits), நிறமாற்றம், துரு, கீறல்கள், காடிகள் (grooves) போன்ற பழுதுகளை நம்பத்தகுந்த…
Read more

எளிய தமிழில் Computer Vision 25. தரம் பிரித்தல் மற்றும் வகைப்படுத்தல்

ஜவுளித் தொழிற்சாலை மற்றும் கிடங்குகளில் ரகவாரியாகப்பிரித்தல் ஜவுளித் தொழிற்சாலை மற்றும் கிடங்குகளில் வண்ணம் மற்றும் வடிவமைப்புபடி எண்ணுதல் மற்றும் ரகவாரியாகப் பிரித்தல் வேலைகளை கணினிப்பார்வை மூலம் செய்வதால் செலவைக் குறைக்க முடியும். இதற்கு நம் கணினிப்பார்வை அமைப்பு முதலில் செலுத்துப் பட்டையில் நகரும் ஜவுளிகளின் படத்தைப் பிடிக்கிறது. அடுத்து விளிம்பு கண்டறிதலைப் பயன்படுத்தி வடிவங்களை அடையாளம்…
Read more

எளிய தமிழில் Computer Vision 24. தயாரிப்பு மற்றும் பாகங்களைத் தொகுத்தல் (Product and Component Assembly)

செலுத்துப்பட்டையில் (conveyor belt) வரும் பாகங்கள் ஒற்றையாக வரும். மேலும் இவை ஒரே திசையமையில் இருக்கக் கூடும். இவற்றை ஒவ்வொன்றாக எந்திரனின் கைப்பிடியில் பிடித்து எடுப்பது அவ்வளவு கடினமான வேலை அல்ல. பலவிதமான பாகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தாலும் பாகங்களை அவற்றின் வடிவம் (shape), அளவு (size)  மற்றும் பட்டைக்குறி (barcode) மூலம் அடையாளம் கண்டுகொள்ளலாம்….
Read more