இரா. அசோகன்

எளிய தமிழில் Robotics 5. எந்திரனை நிரல் எழுதி இயக்குதல்

தேவையான இயக்கங்களின் வரையறையை முன்னரே கொடுத்துவிட்டால் எந்திரன் மனிதத் தலையீடு இல்லாமல் அவற்றைச் செய்ய முடியும். ஆனால்  நமக்குத் தேவையான வேலை செய்யுமாறு அமைப்பை அடையாளம் கண்டு மற்றும் குறிப்பிட்டு வடிவமைத்து முன்கூட்டியே நிரல் எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக, எடுத்து வைத்தல் (pick-and-place) வேலை செய்யும் எந்திரன் கைமுனை சாதனம் (end effector) எந்தத் தோற்ற…
Read more

எளிய தமிழில் Robotics 4. சேவை எந்திரன்கள்

மூன்று மைல் தீவு (Three Mile Island) 1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மூன்று மைல் தீவு அணுமின் நிலையத்தில் விபத்து ஆகி கதிரியக்க பொருட்கள் கசிந்து விட்டன. மேல் தளத்தைப் பார்வையிட முடிந்தது. பல பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்துகொண்டு சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்க முடிந்தது. ஆனால் கீழ்த்தளத்திலிருந்த நிலவறையைப் பார்க்க இயலவில்லை. ஆகவே…
Read more

எளிய தமிழில் Robotics 3. கொஞ்சம் கோட்பாடு கொஞ்சம் கைப்பயிற்சி

பயிற்சி வழிக் கற்றல் கோட்பாடுகள் உருவமற்றவை. அதிகமானால் சலிப்புத் தட்டும், புரிந்து கொள்வதும் கடினம். கைப்பயிற்சியில் விளையாட்டாகக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் வெறும் கைப்பயிற்சி மட்டுமே செய்தால் நாம் முயற்சிப்பது வேலை செய்தாலும் ஏன் வேலை செய்தது என்று தெரியாது. ஏதாவது பிரச்சினை வந்து கொஞ்சம் மாற்ற வேண்டுமென்றால் எதை மாற்றுவது, ஏன் என்றும் புரியாது. எனவே…
Read more

எளிய தமிழில் Robotics 2. தொழில்துறை எந்திரன்கள்

முதல் எண்ணிம கட்டுப்பாடு மற்றும் நிரல் எழுதி இயக்கக்கூடிய எந்திரனை 1954 இல் ஜார்ஜ் டெவல் (George Devol) என்பவர் உருவாக்கினார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு முதல் யூனிமேட் (Unimate) என்ற பெயர் கொண்ட எந்திரனை இவர் விற்றார். 1961 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியிலுள்ள ஒரு ஆலையில் அச்சு வார்ப்பு எந்திரத்திலிருந்து பழுக்கக்…
Read more

எளிய தமிழில் Robotics 1. நிலம், நீர், வானம் எங்கும் எந்திரன்மயம்!

தானியங்கியியல் (Robotics) என்றவுடனே நம் மனக்கண்ணில் தோன்றுவது எந்திர மனிதன் தான். டெர்மினேட்டர், ஸ்டார் வார்ஸ் படத்தில் வந்த C3P0 மற்றும் R2D2, வால்-E, ரஜினிகாந்தின் எந்திரன் மற்றும் ரோஸி எந்திரப் பணிப்பெண் போன்ற திரைப்படங்களில் வந்த கற்பனை ஆளுமைகள் இந்த எந்திர மனிதனின் கவர்ச்சியை வளர்த்து விட்டன. தவிரவும் மனித இயக்குனரின்றி தானாகவே இயங்கும்…
Read more

திறந்த மூலக் கயெக இயக்கிகள் (CNC Controllers)

கயெக எந்திரங்கள் என்றால் பல நூறு ஆயிரம் முதலீடு செய்து தொழிற்சாலைகளில் வைத்திருக்கும் பெரிய எந்திரங்கள் தான் என்று நினைக்க வேண்டாம். சிறிய அளவில் மேசைமேல் வைத்து வேலை செய்யக்கூடிய இயந்திரங்கள் குறைந்த செலவிலும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் சீரொளி செதுக்கும் எந்திரங்கள் (Laser Engravers) அல்லது மரம் அல்லது நெகிழிப் பலகையில் துருவல் செய்யக்கூடிய…
Read more

திறந்த மூல கயெக பாவனையாக்கிகள் (CNC Simulators)

ஏன் பாவனையாக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்? கயெக நிரலாக்கம் (CNC Programming) பற்றிய அடிப்படைகளை முந்தைய கட்டுரையில் காணலாம். புதிதாக நிரல் பயில்வோர் தங்கள் நிரலை ஓட்டிப் பார்க்க ஒரு எளிதான வழி தேவை.  கயெக எந்திரங்கள் விலை உயர்ந்தவை. மேலும் உற்பத்திக்குப் பயன்படும் எந்திரங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. அனுபவமுள்ள நிரலாளர்கள்கூட கயெக நிரலாக்கத்தில் மிகப்…
Read more

கயெக நிரலாக்கம் (CNC Programming)

கணினி எண்ணிம கட்டுப்பாட்டு (Computer Numerically Controlled) எந்திரங்களைத் தமிழில் அஃகுப்பெயராக கயெக எந்திரங்கள் என்று கூறலாம். கணினி கட்டுப்பாட்டில் மரவேலை வழிச்செயலி (Woodworking Router), மின்ம வெட்டல் (Plasma Cutting), சீரொளி வெட்டல் (Laser Cutting), செதுக்கல் (Engraving), பற்றவைத்தல் (Welding) போன்ற பல எந்திரங்களை இயக்கலாம். இக்கட்டுரையில் கயெக கடைசல் இயந்திரம் (CNC…
Read more

பொறியியல் வரைபடம் – திறந்த மூல லிபர்கேட் (LibreCAD)

திறந்த மூல லிபர்கேட் மென்பொருளை உபுண்டு 16.04 இல் எப்படி நிறுவுவது என்று இங்கே பார்க்கலாம். இவர்கள் சொன்ன மூன்று கட்டளைகளையும் கொடுத்தவுடன் லிபர்கேட் 2.2.0 வை நிறுவியது. முதன்முதலாக ஓட்டும்போது மெட்ரிக் அளவை முறையில் மிமீ என்று தேர்ந்தெடுக்கவும். மொழித் தேர்வில் ஆங்கிலத்தை அப்படியே விட்டுவிடலாம். பின்னால் மாற்றவேண்டுமென்றால் தேர்வுப் பட்டியலில் Options (தேர்வுகள்)…
Read more

தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 28. மொழித் தொழில்நுட்பத்தில் வளங்கள் மிகுந்த மொழியாகத் தமிழை உயர்த்துவோம்

இயல் மொழியியலில் அண்மைய தொழில்நுட்பக் கலை பற்றிய ஆய்வு, தொகுதி 13-14 இலிருந்து கீழ்க்கண்ட மேற்கோள் எடுக்கப்பட்டது. “மொழித் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் பெறக்கூடிய நன்மைகள் இவை. கணினிகளின் பயன்மை (usability) அதிகரிக்கிறது. மேலும் கணினி பயன்பாட்டில் பாமர மக்கள் தன்மேம்பாடு பெறவும் (empowering) வழிவகுக்கிறது.” தமிழின் கடந்த முதன்மைத்துவத்தை மீண்டும் பெற முயல்வோம் 1805…
Read more