கணியம்

எளிய தமிழில் Computer Vision 23. சோதனை அமைப்புகள் (Inspection systems)

அடுத்து கணினிப் பார்வை அமைப்புகளைத் தொழில்துறையில், மேலும் குறிப்பாகத் தயாரிப்பில், பயன்படுத்தும் சில வழிமுறைகளைப் பார்ப்போம். பார்வை சோதனை அமைப்புகள் என்றால் என்ன?  பார்வை சோதனை அமைப்புகள் (இயந்திரப் பார்வை அமைப்புகள்) பல்வேறு தொழில்துறை மற்றும் உற்பத்தி வேலைகளில் பட அடிப்படையிலான சோதனையைத் தானியங்கி முறையில் வழங்குகின்றன. 2D மற்றும் 3D இயந்திரப் பார்வை அமைப்புகள்…
Read more

எளிய தமிழில் Computer Vision 22. கற்றல் தரவு தயார் செய்தல்

புதிய பணியாளருக்குப் பயிற்சி கொடுப்பது போலவேதான் நீங்கள் கைமுறையாக வகைப்படுத்தல் (classification) செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு புதிய பணியாளருக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். என்ன செய்வீர்கள்? நீங்கள் வகைப்படுத்திய மாதிரிகளைக் காட்டி அதேபோல் செய்யச் சொல்வீர்கள் அல்லவா? எந்திரக் கற்றலில் பழக்குவதும் அதேபோல் தான். கைமுறையாக வகைப்படுத்திய படங்கள் ஆயிரக்கணக்கில் தேவை….
Read more

எளிய தமிழில் Computer Vision 21. படத் தரவுத்தளங்கள்

இயந்திரக் கற்றலுக்கு படத்தரவுகள் அவசியம் இயந்திரக் கற்றல் முறையில் பல்லாயிரம் படங்களையும் அவற்றைக் கைமுறையாக வகைப்படுத்திய தரவுகளையும் உள்ளீடு செய்யவேண்டும் என்று முன்னர் பார்த்தோம். இம்மாதிரி படங்களும், தரவுகளும் நமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம்னிஸ்ட் (MNIST)  இது கையால் எழுதப்பட்ட இலக்கங்களின் பெரிய தரவுத்தளமாகும். இது பொதுவாக பல்வேறு இயந்திரக் கற்றல் பட வகைப்படுத்தல் (classification)…
Read more

எளிய தமிழில் Computer Vision 20. கணினிப் பார்வையும் இயந்திரக் கற்றலும் (Machine learning)

இயந்திரக் கற்றல் (Machine learning) கணினிப் பார்வை வேலைகளுக்குத் தோதாக பல வினைச்சரங்கள் (algorithm) ஓபன்சிவியில் நிரலகங்களாக உள்ளன என்று முன்னர் பார்த்தோம். இயந்திரக் கற்றல் முறையில் பல்லாயிரம் படங்களையும் அவற்றைக் கைமுறையாக வகைப்படுத்திய தரவுகளையும் உள்ளீடு செய்வோம். இவற்றைப் பார்த்து வடிவமைப்பைக் (pattern) கணினி அடையாளம் கண்டுகொள்ளும் (recognize). பின்னர் நீங்கள் ஒரு புதிய…
Read more

அச்சு நூல்களை மின்னூலாக்கம் செயஅதிவேக A3 வருடி வாங்கியுள்ளோம்

  கணியம் அறக்கட்டளை சார்பாக A3 வருடி (ஏற்கனவே பயன்படுத்திய நகலியுடன் இணைந்தது) ஒன்றை வாங்கியுள்ளோம். Xerox 5755 வகை இது.  இதன்மூலம் இன்னும் அதிகமான புத்தகங்களை மின்னூலாக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. பரவலாக பயன்படுத்தப்படும் சந்தைகளில் கிடைக்கும் A3 அளவுள்ள வருடிகள் தோராயமாக ரூ.50000/- முதல் ரூ.100000/- வரை இருக்கும். இத்தகைய வருடிகள் பிரத்யேகமாக வருடுவதற்காக…
Read more

எளிய தமிழில் Computer Vision 19. திறன்மிகு படக்கருவிகள் (Smart cameras)

நாம் இதுவரை பார்த்தவை படக்கருவி தனியாகவும் கணினி தனியாகவும் உள்ள இயந்திரப் பார்வை அமைப்புகள். படக்கருவியுடன் கணினியும் சேர்ந்தே வந்தால் இவற்றை திறன்மிகு படக்கருவிகள் என்று சொல்கிறோம். இவை பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைகின்றன: கம்பிவடம் படக்கருவியிலும் கணினியிலும் சரியாகப் பொருந்துகிறதா, சமிஞ்சை சரியாக வந்துசேர்கிறதா என்று பார்க்கும் பிரச்சினை நமக்குக் கிடையாது. அளவும், எடையும்…
Read more

எளிய தமிழில் Computer Vision 18. எந்திரனுக்குப் பார்வை மென்பொருளாக ஓபன்சிவி

ராஸ் (ROS) தொகுப்பில் கணினிப் பார்வைக்கு ஓபன்சிவி (OpenCV)  ராஸ் (Robot Operating System – ROS) என்பது எந்திரன்களுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் கட்டற்ற திறந்தமூல இயங்குதளத் தொகுப்பு. இது ஆராய்ச்சி மற்றும் சோதனைகளுக்கு மட்டுமல்லாமல் வணிகரீதியாக விற்பனை செய்யப்படும் எந்திரன்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முதன்மை கணினிப் பார்வை மென்பொருளாக கட்டற்ற திறந்தமூல ஓபன்சிவியைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்….
Read more

எளிய தமிழில் Computer Vision 17. காணொளியை செயல்படுத்தல் (Video processing)

காணொளித் தாரையை (streaming video) செயல்படுத்துவது என்பது தொடர்ச்சியான செயல்முறை அல்ல. நாம் காணொளியைக் கையாளும்போது சட்டகங்களை (frames) தனித்தனியாகத்தான் செயல்படுத்துகிறோம். ஏனெனில் ஒவ்வொரு சட்டகமும் ஒரு படம் தானே. சட்டகம் கவர்வி (Frame grabber) சட்டகம் கவர்விகள் ஓடும் காணொளியில் நம் பகுப்பாய்வுக்குத் தேவையான சட்டகங்களைப் பிரித்தெடுத்து அனுப்பும் வேலையைச் செய்பவை. முன் காலத்தில்…
Read more

எளிய தமிழில் Computer Vision 16. இயந்திரப் பார்வை மின்சுற்றுப் பலகைகள் (Machine vision boards)

நாம் சோதனைகள் செய்து பார்க்கவும் பயிற்சிகள் செய்யவும் குறைந்த விலையில் சில இயந்திரப் பார்வை மின்சுற்றுப் பலகைகள் (Machine vision boards) சந்தையில் கிடைக்கின்றன. இந்த வன்பொருட்களின் வடிவமைப்பும் (hardware design) திறந்த மூலமாகக் கிடைப்பதால் மற்ற நிறுவனங்களும் குறைந்த செலவில் தயாரித்து விற்கிறார்கள். பலர் இவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் தாங்கள் எழுதிய நிரல் தொகுப்புகளையும்…
Read more

எளிய தமிழில் Computer Vision 15. படக்கருவி வில்லையும் (Camera lens) ஒளியமைப்பும்

இணையப் படக்கருவிகளைப் (Webcams) பொதுவான வேலைகளுக்குப் பயன்படுத்துவதால் ஒருங்கிணைந்த (integrated) வில்லைகளுடன் வருகின்றன. ஆகவே இவற்றை மாற்ற இயலாது. தொழில்துறை இயந்திரப் பார்வை படக்கருவிகள் வில்லைகள் இல்லாமல் வருகின்றன. ஏனெனில் வேலையைப் பொறுத்து வெவ்வேறு உருப்பெருக்கத்தில் (magnification), பல்வேறு குவிய நீளங்களில் (focal lengths) மட்டுமல்லாமல், பலவிதமான பிரிதிறன்களிலும் (resolutions) இதற்கு வில்லைகள் தேவைப்படும். கைமுறைக்…
Read more