எளிய செய்முறையில் C/C++ – பாகம் – 4

வரிசை () அணி (Array) :

Array எனபது ஒரே வகையான பல variables-ஐ உள்ளடக்கிய ஒரு தனி variable ஆகும்.

அதாவது, நமக்கு ஒருவரின் வயதை சேமிக்க “age” என்ற ஒரு “integer” variable தேவை படும். அதுவே 3 பேரின் வயதுகளை store செய்ய 3 variables தேவை இல்லை. அதற்கு பதிலாக ஒரே ஒரு array variable பயன் படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக

int age[3];

இந்த வரி(statement) ஆனது 3 வயதுகளை சேமிக்க போதுமானதாக இருக்கும். இதனை கீழ் வருமாறு பிரிக்கலாம்

1. age[0]

2. age[1]

3. age[2]

இங்கே முதல் variable 0 விலிருந்து ஆரம்பிப்பதை கவனிக்க. நாம் age[3] என்று சொல்லும் போது அது 0 விலிருந்து 2 வரை variables ஐ கொடுக்கும்.

இங்கே மூன்று நபர்களின் வயதை வாங்கி அதற்கு சராசரி (average) கண்டு பிடிக்க சிறிய program ஒன்றை காண்போம்.

Sample Program

int main()

{

int age[3],average;

printf(“Please enter age of first person : “);

scanf(“%d”,&age[0]);

printf(“Please enter age of second person : “);

scanf(“%d”,&age[1]);

printf(“Please enter age of third person : “);

scanf(“%d”,&age[2]);

average = (age[0] + age[1] + age[2] ) / 3;

printf(“\nAverage age of these 3 persons is : %d \n”, average);

return 0;

}

Output:

$ gcc array.c

$ ./a.out

Please enter age of first person : 28

Please enter age of second person : 30

Please enter age of third person : 38

Average age of these 3 persons is : 32

 

வரிசையின் (அ) அணியின் வகைகள் (Types of Arrays):

வரிசைகள் 3 வகைப்படும். அவை

1. ஒற்றை பரிமாண அணி (one dimensional array)

2. இரு பரிமாண அணி (two dimensional array)

3. பல பரிமாண அணி (multi dimensional array)

1. ஒற்றை பரிமாண அணி (one dimensional array)

இந்த ஒற்றை பரிமாண அணி (one dimensional array) யில் variables ஒரே பரிமாணத்தில் இருக்கும். நமது முந்தைய program இந்த வகையை சார்ந்தது.

எ.கா. int age[10];

2. இரு பரிமாண அணி (two dimensional array)

இந்த இரு பரிமாண அணி (two dimensional array) யில் variables இரண்டு பரிமாணத்தில் இருக்கும். எடுத்துக்காட்டாக அணி(Matrix), அட்டவணை (Tables) இவை இரு பரிமாண அணியில் வரும்.

எ.கா. int matrix[3][3];

3. பல பரிமாண அணி (multi dimensional array)

இரண்டுக்கு மேலான பரிமாணத்தை உடைய அணிகள் இந்த வகையை சார்ந்தது.

எ.கா. int array[10][10][10];

இவற்றை பற்றிய மேலான தகவல்களை அடுத்த இதழில் காண்போம்.

 

%d bloggers like this: