Bluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடு

 

Bluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடானது வாடிக்கையாளர் விரும்பியவாறு செயல்பட அனுமதிக்கின்றது. .இது செயல்களை கட்டுபடுத்துவதற்கான கட்டளை வரித்தொடர்களையும்(Programming language) , வலைப்பதிவை உருவாக்கிட உதவிடும் உரைநிரல் மொழியையும்(Scripting language) , காட்சிபடுத்திட உதவும் குறியீட்டு மொழியையும்(Markup Language) ஆதரிக்கின்றது. இது வடிகட்டி(filter) ,சிறுசிறு குறிமுறைகள் (snippets of code) ஆகியவற்றிற்கான கட்டளை வரிகளை வெளிப்புறத்திலிருந்துசேர்த்திட உதவிடும் விரிவாக்க செயலை அனுமதிக்கின்றது. மேலும் புதிய மொழிகளையும் ,புதியவசதிவாய்ப்புகளையும் சேர்த்து கொள்ள இது அனுமதிக்கின்றது .தற்போது Bluefish2.2.4 எனும் இதனுடைய புதிய பதிப்பு விண்டோவில் செயல்படுமாறு வெளியிடபட்டுள்ளது

இது விண்டோ,மேக்,லினக்ஸ் போன்ற எந்தவொரு இயக்க முறைமைகளிலும் செயல்படுமாறும், ஒரே உரைபதிப்பானானது குறியீட்டு மொழி (Markup Language)போன்ற பல்வேறு மொழிகளிலும் செயல்படும் வண்ணம் மிகத்திறன்வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டு வெளியிடபட்டுள்ளது.

மிகப்பெரிய கோப்புகளையும், ஒரே சமயத்தில் ஏராளமான அளவிலான கோப்புகளை திறந்து கையாளும் வண்ணம் வடிவமைக்கபட்டு வெளியிடபட்டிருந்தாலும் இதனுடைய கோப்பின் அளவு 4.2 எம்பி ஆகும்.

இது மிகப்பிரபலமான கட்டளைவரித்தொடர் மொழிகளான(Programming language) சி ,சி++ ஜாவா, போன்றவைகளையும், குறியீட்டு மொழிகளான (Markup Language) ஹெச்டிஎம்எல்5, கோல்டு பியூஷன் மார்க்அப் லாங்குவேஜ் ஆகியவைகளையும், உரைநிரல் மொழிகளான(Scripting language)பியெர்ல், பைதான் ,ரூபி ,விபி ஸ்கிரிப்பட், ஜாவா ஸ்கிரிப்ட் போன்ற மொழிகளையும் ஆதரிக்கின்றது. அதுமட்டுமல்லாது தமிழ், சீன, ஜப்பானிய மொழி போன்ற பதினேழு மொழிகளுக்குள் மொழிமாற்றம் செய்திடும் திறன்மிகுந்தது ஆகும் இது இணைய பக்கங்களை உருவாக்குவதிலும் ஒதுக்கீடு செய்வதிலும் சேவையாளர் பணியிலும் மிகசிறப்பாக செயல்படுகின்றது

இதில் வழக்கமான உரைபதிபபான்களில் உள்ளவறு கட்டளைபட்டை, கருவிகளின் பட்டை, குறிப்பிட்ட செயலுக்கு உடன் தாவிசெல்வதற்கான தாவிபட்டை, கோப்பினை தேடிபிடிப்பதாற்கான தேடுபொறி , உரைகளை திருத்திட உதவிடும் பதிப்புதிரை என பல்வேறு உள்ளடக்கங்களை கொண்டுள்ளது .திரையின் கீழ்பகுதியிலும் வழக்கமான நிலைபட்டை, கட்டளைவரிகளின் வெளியீட்டு பகுதி ஆகியவை உள்ளன. இதன் திரைவடிவமைப்பானது வாடிக்கையாளர் விரும்பியவாறு குறிப்பிட்ட பகுதி அல்லது பலகம் திரையில் தோன்றவேண்டுமெனில் தோன்றசெய்யவும் குறிப்பிட்ட பகுதி மறையசெய்யவேண்டுமெனில் அவ்வாறே மறையசெய்யவும் அனுமதிக்கின்றது

நம்மால் அடிக்கடி பயன்படுத்தபடும் கட்டளைகளை விரைவாக அணுகுவதற்கேற்ப அவைகளை முதன்மையான இடத்தில் வைத்து கொள்ளுமாறு அனுமதிக்கின்றது. இதனுடைய திரையின் இடதுபுற பலகத்தில் கோப்பினை தேடிபிடிப்பதாற்கான (file browser)என்றவசதி, சிறுசிறு குறிமுறைகள் (snippets of code) சேர்ப்பதற்கான வசதி,பக்க அடையாளக் குறியிடும் (bookmark)வசதி ,எழுத்து அமைவு பட(Character map)வசதி ஆகியவை இதில் கிடைக்கின்றன

திரையின் இடதுபுற பலகத்தில் உள்ள கோப்பினை தேடிபிடிப்பதற்கான (file browser)வசதியின்மூலம் கோப்பினை புதியதாக உருவாக்குதல், ஏற்கனவே உள்ள கோப்பினை பெயர்மாற்றம் செய்தல், நிரந்தரமாக நீக்கம் செய்திடுதல் என்பனபோன்ற பல்வேறு பணிகளை வழக்கமான உரைபதிப்பானில் செய்வதைபோன்று செயல்படுத்தலாம் ஒருகுறிப்பிட்ட செயல்திட்ட பணிக்காக பல்வேறு குறிமுறைகளைஅல்லது குறிப்பிட்ட குறிமுறையை அடிப்படையாக கொண்ட தனித்தனி கோப்புகளை ஒருங்கிணைத்து ஒரு குழுவாக அல்லது தொகுதியாக உருவாக்கிட இது அனுமதிக்கின்றது வடிகட்டுதல்,காலியான வரிகளை நீக்கம் செய்தல் ,டாஸ் கட்டளை வரிகளை யுனிக்ஸ் கட்டளை வரியாக உருமாற்றம் செய்தல், திரும்ப திரும்பவரும் வரிகளை நீக்கம் செய்தல், குறிமுறைகளை வாடிக்கையாளர் விரும்பவண்ணம் வடிவமைப்பை அழகுபடுத்தி செம்மைபடுத்துதல், கோப்பினை பதிப்பித்தலுக்கான கட்டளை வரிகளை சேர்த்தல் என்பன போன்ற வழக்கமான பல்வேறு உரைபதிப்பு செயல்களை இதில் செய்திடமுடியும்.

பல்வேறு கோப்புகளை ஒரேசமயத்தில் திறந்து பணிபுரியும் போது ஒரு குழுவான குறிமுறைகள் மற்ற கோப்புகளிலும் உரைத்தொகுதி ஒத்தியங்குமாறு செய்யும்(Synchronize Text Block ) வசதி இதில் உள்ளது இந்த உரைத்தொகுதி ஒத்தியங்குமாறு செய்யும்(Synchronize Text Block ) வசதியின்மூலம் குறிப்பிட்ட உரைத்தொகுப்பின் தொடக்கத்திலும் முடிவிலும் இந்த உரைபதிப்பான் ஆனது அடையாளக் குறியீடு (bookmark) செய்து கொள்ள அனுமதிக்கின்றது இணைய பக்கங்களை உருவாக்கிடும் போது எழுதப்படும் ஏராளமான கட்டளை வரிகளில் உள்ள செயல் தட்டங்களில எழுத்துபிழைகளை சரிசெய்யஉதவும்Spell check எனும் வசதி இதில் உள்ளது .

ஜாவா, ஹெச்டிஎம்எல்5 ,விபி ஸ்கிரிப்ட் போன்ற மொழிகளின் கட்டளை வரிகளை சிறுசிறு குறிமுறைகளாக (snippets of code) தனித்தனி தொகுதியாக பிரித்து வைத்துகொள்ளும் வசதி இதில் உள்ளதால் குறிப்பிட்ட குறிமுறைகளின் வரியானது எந்த மொழியில் எழுதபட்டுள்ளது என குழம்பி தவிக்காமல் தெளிவுபடுத்த இது உதவுகின்றது

மிகப்பெரிய செயற்திட்டங்களில் பல்வேறுகோப்புகளை உருவாக்கவேண்டிய நேரங்களில் ஒவ்வொரு வகையான கோப்புகளையும் தேடிபிடித்து திறப்பதற்கு மிகச்சிரமமாக உள்ள நிலையில் இடதுபுறபலகத்தில் உள்ள குறிப்பிட்ட கோப்பகத்தை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் குறுக்குவழி பட்டியில் Open Advanced என்ற வாய்ப்பினை தெரிவுசெய்தவுடன் கோப்புகள் அமைப்பின் வகைவாரியாக (.css, .java, .html)திரையில் தோன்றும் அவற்றுள் தேவையான வகையில் உள்ள கோப்புகளில் நாம்விரும்பும்கோப்பினை திறந்து கொள்ளமுடியும் இதே வழிமுறையில் துனைகோப்பகத்தில் உள்ள கோப்புகளையும் தேடிபிடித்து திறந்து கொள்ளமுடியும்

குறிப்பிட்ட தவறான சொல்லை அல்லது சொற்றொடரை திருத்தம் செய்து சரியான சொல்லை அல்லது சொற்றொடரை மாற்றியமைப்பதற்கான find and replaceஎனும் வசதி இதில் உள்ளது

இலக்கண பிழைகளையும், எழுத்துபிழைகளயும் சுட்டிகாட்டிடும் வசதி சொல்லை அல்லது சொற்றொடரை தட்டச்சு செய்திடும்போது மிகுதி எழுத்துகளை தானாகவே நிரப்பி கொள்ளும் வசதி ,உரையாடல் பெட்டி வழிகாட்டி உரையாடல் பெட்டி போன்றவைகளை தோன்றசெய்தல் என்பனபோன்ற வழக்கமான உரைபதிப்பானின் அனைத்து செயல்களையும் செய்யும் திறன் கொண்டதாகும் இதனைபற்றி மேலும் அறிந்து கொள்ள bluefish.openoffice.nl/index.html என்ற இணைய தளத்திற்கு செல்க

 – ச.குப்பன் <kuppansarkarai641@gmail.com>

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: