BKchem : வேதியியல் மூலக்கூறு வரைபடங்களை எளிதாக்கும் ஒரு கட்டற்ற மென்பொருள்

வேதியியல், இயற்பியல், பொருளறிவியல் (Material Science), மீநுண்ணறிவியல் (Nanoscience), வேதி தகவல் நுட்பம் (Cheminformatics), உயிரி தகவல் நுட்பம் (Bioinformatics) இதுபோன்ற வேதியியல் சம்பந்தப்பட்ட துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பேராசிரியர்களும், மாணவர்களும் பெரும்பாலும் தங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், திட்ட விளக்கங்கள் போன்றவற்றிற்கு தேவைப்படும் வேதியியல் மூலக்கூறு வரைபடங்களை Perkin Elmer (பல ஆராய்ச்சிக் கருவிகளை தயாரித்து வழங்கும் பெரிய நிறுவனம்) -ன் தயாரிப்பான ChemDraw என்ற வர்த்தக மென்பொருளைக் (Cracked version) கொண்டே உருவாக்கி வருகின்றனர்.

லினக்ஸ் இயங்குதளத்திலும் வேதியியல் தொடர்பான பணிகளுக்கு பல கட்டற்ற மென்பொருள்கள் (Chemistry Packages) கிடைக்கின்றன. BKchem, gchempaint, easychem, bist, chemtool, xdrawchem என பல வகையான மென்பொருள்கள் இருந்தாலும், python மூலம் எழுதப்பட்ட BKchem மட்டுமே மூலக்கூறு வரைபடங்களை சிறப்பாக உருவாக்க உதவும் ஒரு முழுமையான மற்றும் சுலபமான தீர்வாகும். BKchem மென்பொருளானது Beda Kosata என்பவரால் எழுதப்பட்டு, 10 வருடத்திற்கும் மேலாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதனை

apt-get install bkchem அல்லது

apt-get install debichem-view-edit-2d

என்ற கட்டளையை முனையத்தில் அடிப்பதன் மூலம் நிறுவலாம்.

BKchem -ன் சிறப்புகள் :

  • அளவற்ற undo மற்றும் redo

  • SVG, EPS, PDF, PNG கோப்பு ஆதரவு

  • CML (Chemical Markup Language – பல வேதியியல் மென்பொருள்களில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு கோப்பு அமைப்பு) கோப்பினை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் வசதி.

  • வரைபடத்தை 3D -க்கு சுழற்றுதல்

  • பொதுவாக பயன்படுத்தப்படும் வரைபடங்களுக்கு வார்ப்புருக்கள் (templates) (பென்சின் வளையம், மேலும் பல)

  • libreoffice – Draw விற்கு ஏற்றுமதி செய்யும் வசதி

வர்த்தக மென்பொருளான ChemDraw -விற்கு நிகரான மேலும் பல வசதிகள் BKchem -ல் உள்ளன. ChemDraw –வை பயன்படுத்தும் உங்கள் நண்பர்களுக்கும் BKchem கட்டற்ற மென்பொருளை பரிந்துரை செய்யலாம்.

இணையதளம் :

bkchem.zirael.org

lenin gurusamy

%d bloggers like this: