Author Archive: கலாராணி

ஒப்பந்த சோதனைகள்

நுண்சேவைகளின் தாக்கமும், ஆக்கமும் பெருகி வருகிற சூழலில், அவற்றை சோதிக்கிற வழிமுறைகளையும் அதற்கேற்றவாறு அமைத்துக்கொள்ளவேண்டும். அதற்கேற்ப நமது சோதனை பிரமிடையும் மாற்றியமைத்துக்கொள்ளவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை, மென்பொருளாக்கம் என்பது ஒற்றைக்கல் சிற்பங்களைப் போல இருந்தது. அதில் சிறு சிறு மாற்றங்களைச் செய்வதற்கும் பிழைகளைத் திருத்துவதற்கும் அதிக நேரமும் உழைப்பும் தேவைப்பட்டது. இதனை சரிசெய்வதற்காக, மென்பொருளின் பல்வேறு…
Read more

நடைமுறைக்கேற்ற நிரலரின் பத்து அடிப்படை பண்புகள்

1. துறைசார்ந்த மொழியைப் பேசவேண்டும். ஒவ்வொரு மென்பொருளும் ஏதோவொரு துறையின் தேவைக்காகவே உருவாக்கப்படுகிறது. எந்தத் துறையின் பிரச்சனைகளுக்குத் தீர்வாக மென்பொருளை உருவாக்குகிறோமோ, அதற்கான நிரலில், அந்தத் துறை சார்ந்த கலைச்சொற்கள் நிறைந்திருக்கவேண்டும். அப்போதுதான், துறைசார் வல்லுநர்களும் (SME), நிரலர்களும் மென்பொருள் குறித்த விவாதங்களில் சிரமமின்றி பேசிக்கொள்ளமுடியும். அதேபோல, நிரலின் கூறுகள் (module), இனக்குழுக்கள் (class), மாறிகள்…
Read more

கணியத்தில் பெண்களின் பங்களிப்பு

இன்றைய நிறுவனங்கள் பலவற்றிலும், தொடக்க நிலையில் ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் பெண்கள் இருந்தாலும், நான்கைந்து ஆண்டுகளுக்கு மேல் அனுபவமுள்ள பெண்களைக் கண்டறிய சிரமப்படுகின்றனர். அதிலும் பெண் தலைவர்களைக் கொண்ட நிறுவனங்கள் அத்தி பூத்தாற்போல அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன. இதற்குப் பல காரணிகள் இருக்கலாம். பள்ளிப்படிப்பை முடித்த பெண்கள் அனைவரும் கல்லூரிக்குச் செல்வதில்லை. கல்லூரியில் பட்டம் பெற்ற…
Read more

விரைவு எதிர்வினை குறியீடு (QR code)

QR Code என சுருக்கமாக அழைக்கப்படுகிற Quick Response Code-ஐ நாம் அன்றாடம் பல இடங்களில் கடந்துசெல்கிறோம். கடைகளில் வாங்கும் பொருள்களிலிருந்து, செய்தித்தாள் விளம்பரங்கள் வரை இக்குறியீட்டை நாம் காணலாம். நமது திறன்பேசியிலுள்ள கேமராவைக்கொண்டு இக்குறியீட்டை வருடும்போது அதில் ஒளித்துவைக்கப்பட்டுள்ள செய்தியை நாம் அறிந்துகொள்ளலாம். இச்செய்தி ஒரு வணிகப்பொருளுக்கான வலைத்தள முகவரியாகவோ, நிறுவனங்களின் வைபை கடவுச்சொல்லாகவோ…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – தரவத்தள மாற்றச்சேவை

வணிகக்காரணங்களுக்காகவோ, செயல்பாட்டுத்திறனை மேம்படுத்துவதற்காகவோ, ஒரு செயலியின் தரவுத்தளத்தை வேறொரு தரவுத்தளத்திற்கு மாற்றவேண்டிய அவசியம் ஏற்படலாம். இதுபோன்ற தேவைகள் ஏற்படும்போது தரவுத்தளத்தின் அமைப்பையும், ஒட்டுமொத்த தரவுகளையும் எந்தவித இழப்புமின்றி, அல்லது மிகக்குறைந்த இழப்பு விகிதத்துடன் தரவுத்தளங்களுக்கிடையே மாற்றுவதில் பல நடைமுறைச்சிக்கல்கள் உள்ளன.  தரவுத்தளம் மாற்றப்படும்போது மூல தரவுத்தளத்தில் எழுதப்படும் தரவுகளை இழக்கநேரிடலாம். தரவுகளை இழப்பதைத் தவிர்க்க செயலி…
Read more

எலாஸ்டிக் பீன்ஸ்ட்டாக் – அறிமுகம்

ஒரு நிரலரின் கணினியில் உருவாகிற மென்பொருளைப் பயனருக்குக் கொண்டுபோய் சேர்ப்பதற்கிடையே பல்வேறு படிநிலைகள் உள்ளன. பின்வரும் படங்களின் உதவியுடன் அவற்றைப் புரிந்துகொள்ள முயல்வோம். ஒவ்வொரு மென்பொருளுக்கும் ஒரு பதிப்புக் கட்டுப்பாட்டு அமைப்பு  (Version control system) இருக்கவேண்டும். நிரலர்கள், ஒவ்வொரு நாளூம், பலமுறை தமது நிரலை பதிப்புக் கட்டுபாட்டுக்கு அனுப்பியவண்ணம் இருப்பர். நிரலர்கள் அனுப்புகிற, இந்த…
Read more

லாம்டா உருவக்கம் – செயல்முறை

அமேசான் வலைத்தளத்திலிருந்து மூன்று வழிகளில் லாம்டாவை உருவாக்கலாம். சொந்தமாக எழுதலாம். வடிவச்சிலிருந்து (template) உருவாக்கலாம். மறைசேவையகக் களஞ்சியத்திலிருந்து (serverless application repository) பயன்படுத்தலாம். சுருக்கமாகவும், எளிமையாகவும் லாம்டா உருவாக்கத்தைப் புரிந்துகொள்வதற்காக, நுண்சேவைக்கான (Microservices) வடிவச்சிலிருந்து ஒரு லாம்டாவை உருவாக்கி, பரிசோதித்துப் பார்க்கலாம். நுண்சேவைகள் உருவாக்கத்தில், ஒரு பொருளை உருவாக்குவதும் (Create), பெறுவதும் (Read), இற்றைப்படுத்துவதும் (Update),…
Read more

லாம்டா – AWS Lambda

மறைசேவையக கணிமை – Serverless Computing மேகக்கணிமையிலுள்ள மூன்று முக்கிய சேவைகள் உள்ளன என முன்னமே அறிந்தோம். கட்டமைப்புச்சேவை (Infrastructure as a Service – Iaas) செயற்றளச்சேவை (Platform as a Service – PaaS) மென்பொருள்சேவை (Software as a Service – SaaS) இவற்றோடு கடந்த சில ஆண்டுகளாக செயற்சேவை (Function…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – நேட் நுழைவாயில்கள்

தனிப்பட்ட துணைஇணையங்களிலுள்ள மேகக்கணினிகளுக்கு இணைய இணைப்பை வழங்குவதற்கு நேட் நுழைவாயில்கள் உதவுகின்றன. இணைய இணைப்பு கிடைத்துவிட்டால், பொதுத் துணைஇணையத்திற்கும் தனிப்பட்ட துணைஇணையத்திற்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடாதா? இணையத்திலிருக்கும் எவராலும், தனிப்பட்ட துணைஇணையத்தை நேட் நுழைவாயில் வழியாக அணுகமுடியுமா? இவற்றுக்கு விடைகாண்பதற்கு நேட் என்றால் என்னவென்று அறிந்துகொள்வது அவசியம். இணையமுகவரி மாற்றம் – Network Address Translation…
Read more

அமேசான் இணையச்சேவைகள் – தனிப்பயன் விபிசி

இதுவரையில் நாம் விபிசியின் கூறுகளைப் பற்றியும், ஒவ்வொரு கணக்கிற்கும் அமேசான் உருவாக்கிக் கொடுக்கிற இயல்நிலை விபிசி பற்றியும் அறிந்தோம். அமேசான் இணையச்சேவைகளை முதன்முதலாகப் பயன்படுத்துவோருக்கு, விபிசி பற்றிய எந்தவொரு சிக்கலும் நேராதவண்ணம் இயல்நிலை விபிசிக்கள் பார்த்துக்கொள்கின்றன. முன்னதாக நாம் ஒரு மேகக்கணினியை உருவாக்கியபோதும், அதிலிருந்து ஒரு வலைத்தளத்தை இயக்கியபோதும், விபிசியின் இருப்பைக் கூட நாம் அறிந்திருக்கவில்லை….
Read more