Author Archive: கணியம் பொறுப்பாசிரியர்

PDF கோப்புகளில் இருந்து தமிழ் உரையை நகல் எடுக்கவும் தேடவும் உதவும் PDFA முறை

தமிழ் PDF கோப்புகளில் இருந்து உரையை நகல் எடுப்பது என்பது வெகு நாட்களாகவே சிக்கலாகவே இருந்து வருகிறது. ஒரு தமிழ் PDF ல் இருந்து உரையை நகல் எடுத்தால் நமக்கு குழம்பிய உரை மட்டுமே கிடைக்கிறது. உதாரணம் – உலககேம உற்று கே ாக்கும் ஒரு அற்புதச் சுற்றுலாத் தலமாக அந்தமான் அழகு தீவுகள் உள்ளன…
Read more

த.இ.க – மென்பொருட்களின் மூலநிரல் வெளியீடு

தமிழ் இணையக் கல்விக்கழகம் சென்ற ஆண்டு, தமிழ் ஆய்வுகளுக்கான சொல்திருத்தி உள்ளிட்ட 10 மென்பொருட்களை வெளியிட்டது. இவை மூலநிரல்களுடன் வெளிவர பலரும் ஆவலாகக் காத்திருந்தோம். இன்று அவற்றுகான மூல நிரல்களை வெளியிட்டுள்ளதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அரசின் (மக்களின்) பொருட்செலவில் உருவாகும் மென்பொருட்கள், ஆய்வுகள் யாவும் மூலநிரலுடன், கட்டற்ற மென்பொருட்களாக வெளிவரும் போது தான்,…
Read more

663 மின்னூல்கள் – 78 லட்சம் பதிவிறக்கங்களுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்யும் FreeTamilEbooks.com திட்டம்

78 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள், 663 மின்னூல்கள், பல்லாயிரம் வாசகர்கள், நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், பல புது பங்களிப்பாளர்களுடன் சூலை 26 2020 அன்று FreeTamilEbooks.com திட்டம் 7 ஆண்டுகளை நிறைவு செய்து 8 ஆவது ஆண்டில் நுழைந்துள்ளது. மின்னூல் திட்டமாகத் தொடங்கி, கணியம் அறக்கட்டளையாக வளர்ந்து, மின் தமிழ் உலகில் பல்வேறு செயல்களை செய்யும் வகையில்…
Read more

கணினி வழி தமிழ் இலக்கிய ஆய்வுக்கான கருவிகள் – இணைய உரை

தமிழ் இணையக் கழகம் சார்பில் இணையத்தமிழச் சொற்பொழிவில் 26-07-2020 இன்று பேராசிரியர் ப. பாண்டியராஜா அவர்கள் கணினிவழி தமிழ் இலக்கிய ஆய்வுக்கான கருவிகள் என்ற தலைப்பில் மாலை 7 மணிக்கு உரை நிகழ்த்த உள்ளார். உரையைக் கேட்க இந்த லிங் m.teamlink.co/5526828256 வழியில் உள் நுழையலாம்.

போய் வாருங்கள் கோவை ஞானி ஐயா

எழுத்தாளர் கோவை ஞானி நேற்று காலை இயற்கை எய்தினார். நண்பர் அன்வர் அவர்கள் மார்ச்சு 2019 வாக்கில் கோவையைச் சார்ந்த எழுத்தாளர்களை சந்தித்து, கிரியேட்டிவ் காமன்சு உரிமைகள், மின்னூல்கள், FreeTamilEbooks.com, கணியம் அறக்கட்டளை பற்றி உரையாடினார். எழுத்தாளர் கோவை ஞானி [ kovaignani.org ] அவர்கள் பெரு மகிழ்வுடன் தமது படைப்புகள் அத்தனையும் CC-BY-SA என்ற…
Read more

ஒலிபீடியா – ஒலிப்புத்தகங்கள் உருவாக்கலாம் வாங்க!

ஒலிபீடியா என்பது நாட்டுடைமை மற்றும் படைப்பாக்கப் பொது உரிமையின் கீழ் உள்ள தமிழ் நூல்கள் மற்றும் விக்கிபீடியா கட்டுரைகளைத் தன்னார்வலர்கள் மூலம் ஒலி வடிவமாக மாற்றும் ஒரு சிறு முயற்சி. அவ்வாறு உருவாக்கப்படும் ஒலிப்புத்தகங்கள் அனைத்தும் படைப்பாக்கப் பொது உரிமையின் கீழ் யாவர்க்கும் எந்த கட்டுப்பாடுமின்றி கிடைக்கச் செய்வதே. பார்வையற்றவர்களுக்கு இந்த ஒலிப் புத்தகங்கள் பேருதவியாக…
Read more

கணியம் அறக்கட்டளை பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன் 2020 மாத அறிக்கை

Report in Tamil Report in English தொலை நோக்கு – Vision தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு – Mission அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து…
Read more

ஈ கலப்பை மென்பொருளை C++ இலிருந்து Python மொழிக்கு மாற்ற உதவுங்கள்

அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். கடந்த வாரம் நடந்த virtual conference மிகச் சிறப்பான முயற்சி. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஒருங்கினைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். Opensourceஇல் பங்களிக்க புதிய உத்தவேகத்தை கொடுத்துள்ளது. தற்போதைய இ-கலப்பை மென்பொருள் C++ மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதனை பைத்தான் மொழியில் மாற்றுவதற்கான வேலைகளை சில ஆண்டுகளுக்கு…
Read more

தமிழும் ஒருங்குறியும் – இணைய உரையாடல் – ஜீலை 11 மாலை 7.30 – 8.30 IST – இசூம்

வரும் சனிக்கிழமை (11/07/2020) மாலை 7.30 – 8.30 மணிக்கு (இந்திய நேரம்) “தமிழும் ஒருங்குறியும்” என்ற தலைப்பில் ஓர் இணையவழி உரையாடல் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த கால வரலாறும், இற்றைநிலையும், எதிர்காலத்தில் செய்யவேண்டியவைகளும் பற்றி உரையாட எண்ணியுள்ளேன். இப்புலனத்தில் ஆர்வம் உள்ளோர், நேரம் இயன்றால் பங்கு கொள்ளுங்கள். கலந்து கொள்வதற்கான இணைப்பு…
Read more