Author Archive: இரா. அசோகன்

எளிய தமிழில் CAD/CAM/CAE 7. ஃப்ரீகேட் (FreeCAD) 3D

சால்வ்ஸ்பேஸ் செய்யும் எல்லா வேலைகளையும் ஃப்ரீகேட் செய்ய முடியும். இது தவிர மேலும் பல வேலைகளையும் செய்ய முடியும். ஃப்ரீகேட் பணிமேடைகள் (workbenches) உங்கள் பட்டறையில் மர வேலையும் உலோக வேலையும் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மர வேலைக்கு வாள் (saw), இழைப்புளி (planer), உளி (chisel) போன்ற கருவிகள் கொண்ட ஒரு பணிமேடை தனியாக…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 6. சால்வ்ஸ்பேஸ் (SolveSpace) 3D

எளிதாக நிறுவி இயக்க முடியும் சால்வ்ஸ்பேஸ் 3D என்பது அளவுரு மாதிரியமைத்தல் (parametric modeling) கட்டற்ற திறந்தமூல மென்பொருள். இது விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் கணினிகளில் இயங்குகிறது. விண்டோஸ் கணினிகளில் நிறுவ வேண்டிய அவசியம் கூட இல்லை. EXE கோப்பு அப்படியே ஓடும். இது சிறிய கோப்பு ஆகையால் உங்கள் கணினியில் அதிக இடத்தையும்…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 5. அளவுரு மாதிரியமைத்தல் (Parametric modelling)

நேரடி மாதிரியமைத்தல் (Direct modelling) நாம் ஒரு சிக்கலான வடிவத்தைப் பல படிகளில் உரு மாற்றங்கள் செய்து தயாரித்து முடித்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இதை சேமித்து வைப்பதன் முக்கிய நோக்கம் இந்தக் கோப்பைத் திறந்து திரும்பவும் இந்த வடிவத்தை உருவாக்க இயல வேண்டும். இதை சேமித்து வைக்க நாம் இரண்டு விதமான உத்திகளைக் கையாளலாம்….
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 4. திட வடிவம் உருவாக்கும் உத்திகள்

திட வடிவ ஆக்கம் (Constructive solid geometry – CSG)  நம்மிடம் கோளம், கூம்பு, உருளை, கனச்செவ்வகம், வடை வடிவம் (torus) போன்ற அடிப்படை வடிவங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். இந்த அடிப்படை  வடிவங்களை வைத்துச் சிக்கலான வடிவங்களை உருவாக்கும் வழிமுறைதான் திட வடிவ ஆக்கம். இந்த திட வடிவ ஆக்கத்தில் மூன்று வழிமுறைகள்…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 3. லிபர்கேட் (LibreCAD) 2D

உபுன்டுவில்  லிபர்கேட் நிறுவி, முதல் பயிற்சியாக ஒரு விளிம்புத் தட்டு (flange) வரைபடம் வரைவது எப்படி என்ற என்னுடைய முந்தைய கட்டுரையை இங்கே படிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சமீபத்தில் வெளியிடப்பட்ட, நூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட லிபர்கேட் 2.2 பயனர் கையேடு இங்கே காணலாம்.  வரித்தோற்றம் (orthogonal view) மற்றும் சம அளவுத்தோற்றம் (isometric view) இந்த…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 2. கணினி வழி வடிவமைப்பு (CAD)

எந்திரவியல் பொறியியலே நம் குவியம்   தொழில்முறை கட்டடக்கலை (architecture), பொறியியல் (engineering), அசைவூட்டம் (animation) மற்றும் வரைபட வடிவமைப்பு (graphic design) ஆகியவற்றிற்கு கணினி வழி வடிவமைப்பு மென்பொருள் ஒரு முக்கியமான கருவியாகும். எனினும் இக்கட்டுரைத் தொடரில் நம் குவியம் எந்திரவியல் பொறியியலில் தானிருக்கும் என்பதை நீங்கள் ஒருவாறாக யூகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மேலும் நம்முடைய…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 1. கணினி ஒருங்கிணைந்த உற்பத்தி

நீங்கள் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு ஒரு புது மாதிரியான மின்சார ஆட்டுக்கல் என்ற தோசை மாவு அரைக்கும் இயந்திரம் தயாரிக்கும் யோசனை வருகிறது. அதை நன்கு பகுப்பாய்வு செய்து உங்கள் நிறுவனத்தின் தலைவர்களுக்கு காட்சிப் படுத்துகிறீர்கள். அவர்களுக்கும் உங்கள் யோசனை பிடித்து விட்டது. இந்தத் தயாரிப்பை சந்தையில்…
Read more

எளிய தமிழில் Robotics 21. டர்டில்பாட் 3 – பர்கர் (Turtlebot 3 – Burger)

இது வரை நாம் பார்த்த எந்திரன் தொகுதிகள் கீழ்க்கண்ட வகையில் மிகவும் பயனுள்ளவை: ஆறு வயது முதல் பல்வேறு வயது வரம்புக்கு உட்பட்ட சிறுவர்கள் கற்றுக்கொள்ள எளிதாக நிரல் எழுதும் வகைகள் பல உண்டு. கைமுறையாக செயல்படுத்திப் பார்க்க பல வழிமுறைகள் இருப்பதால் எந்திரனியல் அடிப்படைகளை ஆழமாகப் புரிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம். சிறுவர்கள் விளையாட்டாக தொழில்…
Read more

எளிய தமிழில் Robotics – 20. மற்றும் சில எந்திரன் தொகுப்புகள்

எந்திரன் தொகுப்புகளை வாங்கும் முன் கருத்தில் கொள்ள வேண்டியவை நீங்கள் யாருக்காக எந்திரன் தொகுப்பை வாங்கப் போகிறீர்களோ அந்த வயது வரம்புக்குத் தோதான நிரல் எழுதும் வகை அதில் உண்டா என்று முக்கியமாக உறுதிப்படுத்தவும். கற்றுக்கொள்ள மட்டும்தான் என்றால் நீங்கள் பாவனையாக்கிகளிலேயே கற்றுக்கொள்ள முடியும். உங்கள் பள்ளியிலோ, கல்லூரியிலோ அல்லது ஊரிலோ ஒரு எந்திரன் போட்டியில்…
Read more

எளிய தமிழில் Robotics 19. ஸ்பார்க்கி (Sparki) அர்டுயினோ (Arduino) எந்திரன்

ஆர்க்பாட்டிக்ஸ் (ArcBotics) ஸ்பார்க்கி ஒரு சாதாரண பொம்மையல்ல. எந்திரனியல் பற்றியும் அதன் அடிப்படைகளான அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களையும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள உதவும் ஒரு கல்விக்கான அடிப்படைத் தளமாகும். ஸ்பார்க்கி நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களை இலக்காகக் கொண்டது. ஸ்பார்க்கிக்கு 4 AA மின்கலங்கள் தேவை. நீங்கள் வழக்கமான கார (alkaline)…
Read more