Author Archive: இரா. அசோகன்

எளிய தமிழில் IoT 5. குறைசக்தி (Low power) கம்பியில்லாத் தொடர்பு

கம்பியில்லாத் தொடர்பு (wireless communication) அமைக்க வைஃபை (WiFi), ஸிக்பீ (ZigBee), ஸிவேவ் (Z-Wave), லோரா (LoRa), புளூடூத் (Bluetooth), குறைசக்தி ப்ளூடூத் (Bluetooth Low Energy) போன்ற பல தொழில்நுட்பங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தொலை தூரம், குறை தூரம், உள்ளரங்கு, வெளிப்புறம் போன்ற வெவ்வேறு IoT தேவைகளுக்குப் பொருத்தமானவை. நமக்கு மின்கலனை சிக்கனமாகப் பயன்படுத்த…
Read more

எளிய தமிழில் IoT 4. திறன்மிகு உணரிகளும் இயக்கிகளும் (Smart sensors and actuators)

தான் எடுத்த அளவீடுகளைப் பதப்படுத்தாமல் ஒரு உணரி அப்படியே கச்சாவாக தொலை சாதனத்துக்கு அனுப்பி வைத்தால் அது திறன்மிகு உணரியல்ல. திறன்மிகு உணரி என்றால் சமிக்ஞை வலுவற்றதாக இருந்தால் அதைப் பெருக்கி, எண்ணிம சமிக்ஞையாக மாற்றி, நாம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வேண்டுமென்று சொன்னால் அந்த இடைவெளியில் மட்டுமே அனுப்பும். திறன்மிகு உணரிகளில் குறைந்தபட்சம்…
Read more

எளிய தமிழில் IoT 3. உணரிகளும் (Sensors) இயக்கிகளும் (Actuators)

உணரிகள் மற்றும் இயக்கிகள் என்பவை இயற்பியல் உலகத்துடன் தொடர்பு கொள்ள உதவும் சாதனங்கள். வெப்பம், அழுத்தம் போன்ற காரணிகளை அளவிட்டு மின்சமிக்ஞையாக மாற்ற உணரிகள் சில வகை ஆற்றல்மாற்றிகளைப் (Transducers) பயன்படுத்துகின்றன. ஆற்றல்மாற்றிகள் என்றால் என்ன? ஆற்றல்மாற்றிகள் நமக்கு நாட்டமுள்ள காரணிகளை, எடுத்துக்காட்டாக வெப்பநிலையை, மின்சமிக்ஞையாக மாற்றுபவை உணரிகளின் ஆற்றல்மாற்றிகள். இதற்கு எதிர்மாறாக இயக்கிகள் மின்சமிஞ்சையை…
Read more

எளிய தமிழில் IoT 2. தொழில்துறையில் பொருட்களின் இணையம் (Industrial IoT)

இப்பொழுது நான்காம் தொழிற்புரட்சி வந்துவிட்டது என்று சொல்கிறார்கள். இதில் பொருட்களின் இணையம் பெரும் பங்கு வகிக்கின்றது. அது என்ன நான்காம் தொழிற்புரட்சி? மற்ற மூன்றும் யாவை என்று விவரமாகப் பார்ப்போம். முதல் தொழிற்புரட்சி – இயந்திரங்கள் முதல் தொழிற்புரட்சி, சுமார் 1760 முதல் 1840 வரையிலான காலப்பகுதியில் புதிய உற்பத்தி செயல்முறைகளுக்கு மாற்றியது. கைமுறை வேலைகளுக்குப்…
Read more

எளிய தமிழில் IoT 1. பொருட்களின் இணையம் (Internet of Things)

நாம் இதுநாள்வரை இணையம் என்று சொல்வது கணினிகளின் இணையத்தைத்தான். நாம் மேசைக்கணினி, மடிக்கணினி, கைக்கணினி மற்றும் திறன்பேசி மூலம் வழங்கிகளைத் (servers) தொடர்பு கொண்டு செய்திகளைப் படிக்கிறோம், காணொளிகளைப் பார்க்கிறோம், மின்னஞ்சல் அனுப்புகிறோம்.  வழங்கிகளும் (Web Servers) உலாவிகளும் (Browsers) கொண்டது இணையம் இவை எல்லாமே கணினிகள்தான். இவை எல்லாமே மின்னிணைப்பில் உட்செருகப் பட்டிருக்கும். அல்லது…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 22. பாகங்களின் பட்டியல் (Bill of Materials)

சரி, பாகங்களை வரைந்து விட்டீர்கள். அவற்றைத் தொகுத்துப் பார்த்து விட்டீர்கள். தொகுத்த பின் இயக்கியும் பார்த்து விட்டீர்கள். பொறியியல் பகுப்பாய்வு செய்தாகிவிட்டது. அடுத்து தயாரிப்பைத் தொடங்க வேண்டும் அல்லவா? ஆகவே, வடிவமைப்பு மற்றும் வளராக்கத் துறையிலிருந்து (design and development department) உற்பத்தித் துறைக்கு (production department) இந்தத் தயாரிப்பை வெளியீடும் செய்து விட்டீர்கள். பாகங்களின்…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 21. 3D CNC நிரல் இயற்றல்

பலவிதமான சிஎன்சி இயந்திரங்கள் கணினி எண்ணிம கட்டுப்பாட்டு (Computer Numerically Controlled) எந்திரங்களை சுருக்கமாகக் கயெக (CNC) எந்திரம் என்று கூறலாம். சந்தையில் கீழ்க்கண்டவாறு பலவிதமான கயெக (CNC) இயந்திரங்களும் அவற்றுக்கான கட்டுப்படுத்திகளும் உள்ளன. கயெக துருவல் எந்திரங்கள் (CNC mills) கயெக கடைசல் எந்திரங்கள் (CNC lathes) இழுவை கத்தி எந்திரங்கள் (DragKnife Cutters)…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 20. 2D உருவரைவிலிருந்து CNC நிரல் இயற்றல்

வெட்டுளி ஆரத்தை ஈடு செய்தல் (cutter radius compensation) தகடு, பலகை போன்ற தட்டையான கச்சாப்பொருட்களில் வெளி வடிவத்தை வெட்டுவதை பக்கத்தோற்ற வெட்டு (profile cutting) என்கிறார்கள். உள்பக்கத்தை வெட்டுவதை உட்பள்ள வெட்டு (pocket cutting) என்கிறார்கள். இம்மாதிரி வெட்டை சிஎன்சி உளிக் குடைதல் (CNC Router) பயன்படுத்திச் செய்ய வேண்டுமென்றால் G நிரலில் நாம்…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 19. சிஎன்சி நிரல் இயற்றல் (Computer Aided Manufacturing – CAM)

கணினி எண்ணிம கட்டுப்பாட்டு (Computer Numerically Controlled) எந்திரங்களைத் தமிழில் அஃகுப்பெயராக கயெக எந்திரங்கள் என்று கூறலாம். இவற்றுக்கு எவ்வாறு நிரல் எழுதுவது என்பது பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம் கயெக நிரலாக்கம் (CNC Programming). கயெக எந்திரங்கள் பற்றிய அடிப்படைகள் தெரிந்துகொள்ள என்னுடைய எளிய தமிழில் CNC மின்னூலை இந்த…
Read more

எளிய தமிழில் CAD/CAM/CAE 18. எண்சார்ந்த பகுப்பாய்வு (Numerical Analysis)

உங்கள் முன்னிருக்கும் ஒரு பொறியியல் வடிவமைப்பு பிரச்சனைக்கு தீர்வு காண உங்களுக்கு ஒரு நூதனமான எண்ணம் உதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கருத்துரு நடைமுறையில் செயல்படுமா என்பதை எவ்வாறு நிரூபணம் செய்வது? மேட்லாப் (MATLAB) போன்ற கணித ரீதியான “முன்மாதிரி” மற்றும் சிமுலிங்க் (Simulink) போன்ற அமைப்புகள் “கருத்துருக்கான ஆதாரம் (proof of concept)” அமைப்புகளை…
Read more