ஆண்ட்ராய்டு செயலி கற்க வேண்டுமா? அற்புதமான திறந்த மூல நிரல்களின் இணைப்புகள் இங்கே

ஆண்ட்ராய்டு செயலி எழுதுவது எப்படியென்று கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் புத்தகங்கள், வலைப்பதிவுகள் மற்றும் மன்றங்களில் கேள்வி பதில்கள் படிக்கலாம். ஆனால் ஒரு செயலியை உங்கள் திறன்பேசியில் ஓட்டிப் பார்த்து உடன் அந்த செயலியின் மூல நிரலையும் படித்துப் பார்ப்பது போன்ற கற்றல் அனுபவம் வேறெதிலும் வராது.

இந்தக் கட்டுரையில் ஆண்ட்ராய்டு நிரலாளர் அரித்ரா ராய் (Aritra Roy) இருபதுக்கும் மேற்பட்ட திறந்த மூல ஆண்ட்ராய்டு செயலிகளைத் தேர்ந்தெடுத்து திறனாய்வு செய்திருக்கிறார். அவற்றின் கடினத்தையும் தொடக்கநிலை, இடைநிலை, உயர்நிலை என்று தரமதிப்பீடு செய்துள்ளார். இத்துடன் அவற்றின் மூல நிரலுக்கான இணைப்பும் கொடுத்திருக்கிறார்.

எடுத்துக்காட்டுகள்:

LeafPic: மாறும் பின்புலத்தோற்றம் (dynamic theming) அமல்படுத்த

Easy Sound Recorder: ஒலிப்பதிவு மற்றும் பொருள் வடிவமைப்பு (Material Design) அடிப்படைகள்

PhotoAffix: எளிய ஆனால் பயனுள்ள விருப்பக் காட்சிகள் செய்யும் முறை

Travel Mate: இருப்பிடம் மற்றும் வரைபடங்கள்

Turbo Editor: உரைத் தொகுப்பி

Pedometer: வன்பொருள் உணரி

1 Comment

  1. AI

    இந்த இதழை தொகுத்த இரா.அசோகனுக்கு மிக்க நன்றி… 2,3 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்ட்ராய்டு செயலியை கற்க முயன்ற போது, குழ்ப்பங்கள் இருந்தது. அரித்ரா ராயின் தொகுப்பு, திறந்த மூல செயலிகளை தொகுத்தது, மிக்க உதவியாக இருந்தது….

    Reply

Leave a Reply

%d bloggers like this: