லினக்ஸில் பொதுவான யூனிக்ஸ் அச்சுப்பொறிஅமைவின் (CUPS) மூலம் எங்கிருந்தும் அச்சிடுக

நம்முடைய வீட்டின் அலுவலக அறையில் அச்சுப்பொறி உள்ளது, வீட்டின் மற்றொரு அறையில் மடிக்கணினியில் பணி செய்துவருகிறோம். நம்முடைய வீட்டு வலைபின்னலில் பகிரப்படும் வகையில் அச்சுப்பொறியை அமைத்து உள்ளோம், அதனால் தேவையானபோது நம்முடைய வீட்டில் எங்கிருந்தும் அச்சிட முடியும். இந்த அமைப்பிற்கு சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. இது வழக்கமான லினக்ஸ் கணினி ,பொதுவான யூனிக்ஸ் அச்சுப்பொறி அமைவின் (Common Unix Printing System (CUPS)) மூலம் செயற்படுத்தப்படுகின்றது.
லினக்ஸில் CUPS ஐ நிறுவுதல்
யுனிக்ஸ் அச்சிடுதலுக்கான திறமூல தீர்வாக CUPS ஆனது 1997 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் அதன் வளர்ந்து வரும் யூனிக்ஸ் அடிப்படையிலான OS X க்கு அதை பெரிதும் நம்பியிருந்தது. மேலும் லினக்ஸ், BSD அல்லது mac OS ஆகிய இயக்கமுறைமைகளை பயன்படுத்தி கொள்கின்றோம் எனில், ஏற்கனவே CUPS ஐ நிறுவியிருக்கலாம்.நம்முடைய கணினியில் ஏற்கனவே CUPS நிறுவப்படவில்லை எனில், அதை தொகுப்பு மேலாளருடன் நிறுவுகைசெய்திடலாம்
Fedora, Mageia, or CentOS ஆகிய இயக்கமுறைமைகள் எனில் பின்வரும் கட்டளைவரியை செயற்படுத்திடுக
$ sudo dnf install cups
Debian, Linux Mint,ஆகிய இயக்கமுறைமைகள் எனில் பின்வரும் கட்டளைவரியை செயற்படுத்திடுக
$ sudo apt install cups
CUPS ஐ அணுகுதல்
CUPS ஐ அணுக, ஒரு இணைய உலாவியைத் திறந்து வளாக புரலர்: 631க்குச் செல்க, இது நம்முடைய கணினியின் 631 எனும்பொருத்துவாயில் உள்ளதைத் திறக்கச் சொல்கிறது (கணினி எப்போதும் தன்னை வளாக புரவலர் என்று குறிப்பிடுகின்றது).
இணைய உலாவியானது கணினியின் அச்சுப்பொறி அமைப்புகளுக்கான அணுகலை வழங்குகின்ற பக்கத்தைத் திறக்கிறது. இங்கிருந்து,தேவையானவாறு அச்சுப் பொறிகளைச் சேர்க்கலாம், அச்சுப்பொறியின் இயல்புநிலைகளை மாற்றலாம், வரிசைப்படுத்தப்பட்ட பணிகளை கண்காணிக்கலாம் ,வளாக வலைபின்னலில் அச்சுப்பொறிகளைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கலாம்.
CUPS உடன் அச்சுப்பொறியை கட்டமைத்தல்
CUPS இடைமுகத்திலிருந்து ஒரு புதிய அச்சுப்பொறியைச் சேர்க்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள ஒன்றை மாற்றலாம். ஒரு அச்சுப்பொறியை மாற்றியமைப் பதற்கு, ஒரு புதிய அச்சுப்பொறியைச் சேர்க்கும்போது, புதிய தேர்வுகளைச் செய்வதைத் தவிர்த்து, ஒரு அச்சுப்பொறியை மாற்றியமைக்கும் போது, ஏற்கனவே உள்ளவற்றை உறுதிப்படுத்திடலாம் அல்லது மாற்றலாம் என்பதைத் தவிர்த்து, புதிய பக்கத்தைச் சேர்ப்பது போன்ற அதே பக்கங்களை உள்ளடக்கியதாகும்.
முதலில், Administration எனும்தாவிப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக, பின்னர் விரியும் திரையின்Add Printer எனும்பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குகுக .
ஏற்கனவே இருக்கும் அச்சுப்பொறியை மட்டும் மாற்றியமைத்திடவிரும்பினால், அதற்குப் பதிலாக Manage Printers என்பதைதெரிவுசெய்து சொடுக்குகுக , பின்னர் மாற்ற விரும்பும் அச்சுப்பொறியைத் தேர்ந்தெடுத்திடுக. Administration என்பதன் கீழிறங்கு பட்டியிலிருந்து Modify Printer எனும் வாய்ப்பினை தேர்ந்தெடுத்திடுக.
நாம் மாற்றியமைத்தாலும் அல்லது சேர்த்தாலும் , CUPSஇல் தொடர அனுமதிக்கும் முன் நிர்வாக அங்கீகாரத்தை உள்ளிட வேண்டும். sudo சலுகைகள் இருக்கும் வரை rootஇல் உள்நுழையலாம் அல்லது சாதாரண பயனாளர் அடையாளத்துடன் உள்நுழையலாம்.
அடுத்து, அச்சுப்பொறிக்கு பயன்படுத்தக்கூடிய அச்சுப்பொறி இடைமுகங்களும் நெறிமுறைகளின் பட்டியலும் நமக்கு வழங்கப்படுகிறது. அச்சுப்பொறி நேரடியாக கணினியில் செருகப்பட்டு இயக்கத்தில் இருந்தால், அது வளாக அச்சுப்பொறியாக (Local Printer)பட்டியலிடப்படும். அச்சுப்பொறியானது வலைபின்னலில் இணைக்கப் பட்டு, நம்முடைய வலைபின்னலில் ஒரு மாற்றியுடன் (switch) அல்லது வழிசெலுத்தியுடன் (router) இணைக்கப்பட்டிருந்தால், அதை அணுகுவதற்கு பொதுவாக இணைய அச்சிடும் நெறிமுறையைப் (ipp) பயன்படுத்தலாம் (அச்சுப்பொறியின் ஐபி முகவரியைத் தீர்மானிக்க திசைவியைப் பார்க்க வேண்டியிருக்கும் , ஆனால் விவரங்களுக்கு அச்சுப்பொறியின் ஆவணங்களைப் படித்திடுக). அச்சுப்பொறி ஆனதுHewlett-Packard எனில், அதை அணுக HPLIP ஐப் பயன்படுத்தலாம்.
அச்சுப்பொறியின்அமைப்பிற்கு அர்த்தமுள்ள எந்த நெறிமுறையையும் பயன்படுத்திடுக. எதைப் பயன்படுத்துவது எனத் தெரியாவிட்டால், ஏதேனும் ஒன்றை முயற்சி செய்யலாம், ஒருபரி சோதனைப் பக்கத்தை அச்சிட முயற்சி செய்யலாம், பின்னர் தோல்வி ஏற்பட்டால் வேறு ஒன்றை முயற்சி செய்யலாம்.
அடுத்த திரையில் அச்சுப்பொறி பற்றிய மனித நட்பு விவரங்களைக் கோருகின்றது. இது பெரும்பாலும் நம்முடைய குறிப்புக்காக. அர்த்தமுள்ள அச்சுப்பொறிக்கான விளக்கமும் இடத்தையும்.குறிப்பிடுமாறான ஒரு பெயரை உள்ளிடுக (வழக்கமாக மாதிரி எண்ணைப் பயன்படுத்திகொள்க, ஆனால் பெரிய நிறுவனங்கள் சில நேரங்களில் கற்பனையான நட்சத்திரக் கப்பல்கள் அல்லது தலைநகரங்கள் போன்றவற்றின் பெயர்களைப் பெயரிடுகின்றன), வலைபின்னலில் உள்ள மற்ற கணினிகளுடன் அச்சுப்பொறியைப் பகிர்ந்து கொள்ளுமாறு தேர்வு செய்யலாம். பகிர்வு தற்போது இயக்கப்படவில்லை எனில், பகிர்தலை செயல்படுத்திடுவதற்காக checkboxஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
இயக்கிகள்(Drivers)
அடுத்த திரையில், அச்சுப்பொறி இயக்கியை அமைக்க வேண்டும். அதற்காக அச்சுப்பொறிகளுக்கான திறமூல இயக்கிகளை பெரும்பாலும் openprinting.org இல் காணலாம். ஏற்கனவே ஒரு gutenprint தொகுப்பு நிறுவப்பட்டிருக்கும் வரை அல்லது அச்சுப்பொறியுடன் இணைக்கப்பட்ட இயக்கிகளை நிறுவியிருக்கும் வரை, ஏற்கனவே சரியான இயக்கி இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அச்சுப்பொறி PostScript அச்சுப்பொறியாக இருந்தால் (பல லேசர் அச்சுப்பொறிகள்), நமக்கு ஒரு இயக்கியை விட openprinting.org இலிருந்து ஒரு PPD கோப்பு மட்டுமே தேவைப்படலாம்.
நம்மிடம் இயக்கிகள் நிறுவப்பட்டிருப்பதாக வைத்துக் கொண்டால், கிடைக்கக்கூடிய இயக்கிகளின் பட்டியலுக்கு நம்முடைய அச்சுப்பொறியை தேர்வு செய்யலாம். பொருத்தமான இயக்கியைத் தேர்ந்தெடுத்து பணியை தொடர்ந்திடுக.
பகிர்ந்துகொள்ளப்பட்ட அச்சுப்பொறியுடன் இணைத்தல்
இப்போது நம்முடைய அச்சுப்பொறியை வெற்றிகரமாக நிறுவுகைசெய்து உள்ளமைத்துள்ளோம், வலைபின்னலில் உள்ள வேறு எந்த கணினியிலிருந்தும் அதை இணைக்க முடியும். உதாரணமாக, நம்முடைய வீடுமுழுவதும் பயன் படுத்தும் வாடிக்கையாளர் என்ற மடிக்கணினி இருப்பதாக வைத்துக் கொள்வோம். பகிர்ந்துகொள்ளப்பட்ட அச்சுப்பொறியை அதில் சேர்க்க விரும்புகின்றோம் எனில்.
GNOME , Plasma ஆகிய மேசைகணினிகளில், Printer திரையின் Settings இலிருந்து அச்சுப்பொறியைச் சேர்க்கலாம்.
அச்சுப்பொறி கணினியுடன் இணைக்கப்பட்டிருந்தால், கணினியின் ஐபி முகவரியை உள்ளிடுக (ஏனெனில் அச்சுப்பொறி அதன் புரவலர் மூலம் அணுகக்கூடியது).
அச்சுப்பொறி மாற்றியுடன் அல்லது திசைவிக்கு இணைக்கப்பட்டிருந்தால், அச்சுப்பொறியின் ஐபி முகவரியை உள்ளிடுக.மாற்றாக, வாடிக்கையாளர் கணினியில் CUPS இடைமுகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். CUPS ஐ அணுகுவதற்கான செயல்முறை ஒன்றுதான்: CUPS நிறுவப்பட்டிருப்பதை உறுதி செய்து,ஒரு வலைபின்னலைத் திறந்து,631எனும்வளாக புரவலருக்கு செல்க:.
CUPS வலை இடைமுகத்தை அணுகியவுடன், Administrationஎனும் தாவியின் பொத்தானைத் தேர்ந்தெடுத்திடுக. தொடர்ந்து Printers எனும் பிரிவில் Find New Printers எனும் பொத்தானைக் தெரிவுசெய்து சொடுக்குக, பின்னர் நம்முடைய வலைபின்னலில் பகிர்ந்துகொள்ளப்பட்ட அச்சுப்பொறியைச் சேர்த்திடுக. சாதாரண Add Printer எனும் செயல்முறையின் மூலம் CUPS இல் கைமுறையாக அச்சுப்பொறியின் IP முகவரியை அமைக்கலாம்.
எங்கிருந்தும் அச்சிடுக
இந்த 21 ஆம் நூற்றாண்டில் விரலியில்(USP) நகலெடுத்து சென்று அச்சுப்பொறி இணைக்கப்பட்ட கணினியில் அதனை இணைத்து அச்சிடும் பழக்கத்தினை விட்டிடுக மேலும் மற்றொரு கணினியிலிருந்து அச்சிடுவதற்காக கோப்புகளை மின்னஞ்சல் செய்வதை நிறுத்தி, அச்சுப்பொறியை வளாக வலைபின்னலிற்கு கிடைக்கச் செய்க. வியக்கத்தக்க வகையில் இது மிகவும் எளிதானதும் வசதியானதும் ஆக அமைந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடய தோழர்கள் அனைவருக்கும்ஒரு வலைபின்னலின் வழிகாட்டி போன்று இருந்திடுக!

%d bloggers like this: