பொருட்களுக்கான இணையமான Android Thingsஎன்பதை ராஸ்பெர்ரி பிஐ3 எனும் கணினியுடன் எவ்வாறு இணைப்பது

இதனை செயற்படுத்திடுவதற்கான படிமுறை பின்வருமாறு

படிமுறை.1. முதலில் இதற்காகRaspberry Pi 3   ,2.8GB MicroSD Card   ,3.Android Things Image  , 4Win32DiskImager ஆகிய நான்கையும்  சேகரித்து கொள்ளவேண்டுமென பட்டியலிடுக

படிமுறை.2.    அடுத்து developer.android.com/things/index.htmlஎனும் இணையதளத்திற்கு செல்க  அங்கு Get Developer Preview எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்  திரையில் “Raspberry Pi 3என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில்  Latest preview Image என்பதை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர் தேவையான Android Thingsஇன் இமேஜ் கோப்பின் பெயரை தெரிவுசெய்து download எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகு பின்னர் விரியும் திரையின் நிபந்தனைகளை ஏற்றுகொண்டபின்னர் பதிவிறக்கம் ஆகும்

படிமுறை.3. மேலே படிமுறை2இல் கூறியவாறு பதிவிறக்கம் செய்த கட்டப்பட்ட கோப்புகளிலிருந்து Android Thingsஇன்இமேஜ் கோப்பினை வெளியிலெடுத்திடுக அதனை தொடர்ந்து Win32DiskImager எனும் பயன்பாட்டினை செயல்படசெய்திடுக  உடன்தோன்றிடும் திரையில் நம்முடையAndroid Thingsஇன் இமேஜ் கோப்பினை தெரிவுசெய்து கொள்க மேலும்MicroSD Card என்பதையும் தெரிவுசெய்து கொள்க  பின்னர் Write எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக  உடன்  MicroSD அட்டையில் Android Thingsஇன் இமேஜ் கோப்பானது எழுதப்படும் இந்த பணிமுடிவடைந்ததும்  MicroSD அட்டையை வெளியேற்றி எடுத்திடுக

படிமுறை.4.  நம்முடைய  Raspberry Pi 3 கணினியில் நாம் ஏற்கனவே Android Thingsஇன் இமேஜ் கோப்பினை எழுதிய  MicroSD  அட்டையை அதற்கான வாயிலில் உள்செலுத்தி பொருத்துக  பின்னர் துவக்கஇயக்கம் நடைபெறுவதற்காக சிறிதுநேரம் காத்திருக்கவும் தொடர்ந்து  Android Things ஆனது ராஸ்பெர்ரி பிஐ3 உடன் இணைந்து முதன்மை திரை தோன்றிடும்   அவ்வளவுதான் நான்கே படிமுறையில் பொருட்களுக்கான இணையமான Android Thingsஎன்பதை ராஸ்பெர்ரி பிஐ3 எனும் கணினியுடன் இணைத்து திரையில் தோன்றிட செய்துவிட்டோம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

%d bloggers like this: