பைதான் – ஜாவா: நடப்பு2020 ஆம் ஆண்டில் எது சிறந்தகணினி மொழி

தற்போதைய உலகின் நவீன சகாப்தத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான திறமைநிரலாக்கம் என்பதகும். இந்த நிரலாக்க பயணத்தின் போது வெவ்வேறு நிரலாக்க மொழிகள் வெவ்வேறு பயன் பாடுகளைக் கொண்டுள்ளன என்பதை சிறிது முயன்றால் நம்மால் புரிந்துகொள்ளமுடியும், அதனால் ஒருவரின் தேவைகள் அவருடைய ஆர்வம்ஆகியவற்றின் அடிப்படையில் அவைகளுள் தனக்கு தேவையான மிகச்சரியான பொருத்தமான தொருநிரலாக்க மொழியைத் தேர்வு செய்ய முடியும். அதனால் ஒருவர் கணினிமொழியின் நிரலாக்கத்திற்குள் குதிப்பதற்கு முன், தன்னுடைய தேவைக்கு பொருத்தமான நிரலாக்க மொழியை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும். இருந்தபோதிலும் தற்போது இணையத்தில், எவரும் சிறந்த நிரலாக்க மொழிஎது எனத் தேடினால், அவ்வாறான தேடலின் முடிவில் பைதான் அல்லது ஜாவா ஆகிய இரண்டும் சிறந்த கணினி மொழி என கிடைக்கும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் பைதான் ஜாவா ஆகிய இரண்டில் எது சிறந்தகணினிமொழி என்ற முக்கியமான கேள்வி அவருக்கு முன் வந்து நிற்கும் இதனை தெளிவுசெய்வதற்காக இவ்விரண்டிற்கும் இடையேயான முக்கிய வேறுபாடுகளையும் ஒற்றுமைகளையும் அலசி ஆராய்ந்து பார்த்தபின்முடிவுசெய்தால்நல்லது அல்லவா .
1. நிலையான வகை(Statical Type) இயங்குநிலைவகை(DynamiclalType)
ஒரு நிரலாக்க மொழியில், தொகுக்கும்(Compile ) நேரத்தில் மாறிகளின்( variable) வகை எவையென சரிபார்க்கப்பட்டால், அதநிலையான வகை கணினி மொழியாகும்.
அதற்கு பதிலாக , இயக்க நேரத்தில்( Dynamically) மாறிகளின் வகை எவையெனசரிபார்க்கப்பட்டால், அந்த கணினிமொழி இயங்குநிலைவகை மொழியாகும்
இந்த அளவுகோளின் அடிப்படையில் இவ்விரண்டையும் சரிபார்த்திடும்போது, பைத்தான் ஆனது இயங்குநிலைவகைகணினி மொழியாகும், ஏனெனில் பைத்தானில் இயங்கும் நேரத்தில் மட்டுமே அதனுடைய மாறிகளின் வகை சரிபார்க்கப்படுகிறது மேலும் நிரலாக்கத்தின்போது முன்கூட்டியே எந்தவொரு மாறியின் தரவு வகையையும் இதில் வரையறுக்க வேண்டிய அவசியமில்லை.
அதற்கு மறுதலையாக , ஜாவா ஆனது நிலையான வகை நிரலாக்க மொழியாகும், ஏனெனில் ஜாவாவில் மாறிகள் தொகுக்கும் நேரத்திலேயே சரிபார்க்கப்படுகிறது மேலும் நிரலாக்கத்தின்போது(ஒரு அறிவிப்பின் போது) முன்கூட்டியே மாறியின் தரவு வகையையும் வரையறுக்க (அறிவித்திட)வேண்டம்
2. தொகுக்கப்பட்டமொழி ,விளக்கமளிக்கப்பட்ட (interpreted )மொழி
ஜாவா ஒரு தொகுக்கப்பட்டநிரலாக்க மொழியாகும், அதாவது ஜாவாவில் குறிமுறைவரிகள் முதலில் இயந்திரக் குறியீடாக மாறும், பின்னர் செயல்படுத்த துவங்கும்.
அதற்கு மறுதலையாக, பைதான் என்பது ஒரு விளக்கமளிக்கப்பட்ட நிரலாக்க மொழியாகும், அதாவது பைத்தானின், குறிமுறைவரிகளில் ஒவ்வொரு வரியிலும் பிழை ஏதேனும் உள்ளதாவென சரிபார்த்து பிழையை தீர்வு(சரி)செய்தால் மட்டுமே அடுத்தவரிக்கு செல்லும் இவ்வாறு குறிமுறைமுழுவதும் சரிசெய்தபின்னரே நிரலாக்கம் செயல்படுத்தபடும் .
3. கணினிமொழியின் இயக்க வேகம்
நிரலாக்க மொழியின் வேகம் செயல்திறன் குறித்து ஒப்பிடும்போது, ஜாவா ஒரு நிலையான வகை மற்றும் தொகுக்கப்பட்ட நிரலாக்க மொழி என்பதால் ஜாவா ஒரு தெளிவான வெற்றியாளராவார்.
அதற்கு மறுதலையாக , பைதான் ஒரு இயங்குநிலைவகை, விளக்கமளிக்கப்பட்ட நிரலாக்க மொழிஎன்பதால் பைத்தானின் செயல்திறனும் வேகமும் மிகவும் குறைவாகும்
4. குறிமுறைவரிகளின் நீளம்
நிரலாக்கத்திற்கான குறிமுறைவரிகளின் நீளம் ஜாவாவிற்கும் பைத்தானுக்கும் இடையிலான மிக முக்கியமான மற்றும் செல்வாக்குமிக்க வேறுபாடுகளாக உள்ளன.
உதாரணமாகஅணைவருக்கும் வணக்கம்!” எனும் நிரலாக்கத்தை எடுத்துக் கொள்வோம்.
ஜாவாவில் அணைவருக்கும் வணக்கம்!” எனும் நிரலாக்க மானது
class JavaProgramExample {

public static void main(String[] args) {

System.out.println(“அணைவருக்கும் வணக்கம்!“);

}

}
என்றவாறுநீண்ட குறிமுறைவரிகளாகஅணைவருக்கும் வணக்கம்!” என்ற அச்சிடுவதற்காக எழுதவேண்டியுள்ளது

அதற்கு மறுதலையாக பைத்தானில் அணைவருக்கும் வணக்கம்!” எனும் நிரலாக்க மானது
print(‘அணைவருக்கும் வணக்கம்!‘)
என்றவாறு ஒரேயொரு வரியில் நிரலாக்க குறிமுறைவரிஅணைவருக்கும் வணக்கம்!” என்ற அச்சிடுவதற்காக எழுதினால் போதுமானதாகும்


5. உள்தள்ளல்( Indentation)
நிரலாக்கங்களில், குறிமுறைவரிகளின் பதிப்பாளரின் திரையில் ஒவ்வொரு பக்கத்திலும் வலதுபுறத்தில் எவ்வளவு தூரத்திலிருந்து தள்ளி பயன்படுத்த ப்படவேண்டும் என்பதற்கான காலி வெற்று இடங்களையே உள்தள்ளல் என குறிப்பிடப்படுகிறது.
ஜாவாவில், உள்தள்ளல்கள் புறக்கணிக்கப்படுகின்றன அதற்கு பதிலாக குறிமுறைவரிகளின் தொகுப்பை உருவாக்க பிறை யடைப்புகள்() , இருதலை யடைப்புகள் {} ஆகியஇரண்டும்பயன்படுத்தப்படுகின்றன.
மறுதலையாக, பைதானில் உள்தள்ளல் மிகவும் முக்கியமானசெயலாகும் மேலும் இவ்வாறான உள்ளதள்ளலை மட்டுமே கொண்டு குறிமுறைவரிகளின் தொகுப்பு உருவாக்கப் படுகின்றன.

6. அரைப்புள்ளி( Semicolon)
நிரலாக்கத்தின்போது குறிமுறைவரிகளில் அரைப்புள்ளிகளை காணவில்லை என்பதுதான் பெரும்பாலான பிழையாகும்.பைதான் ஜாவா ஆகிய இரண்டின் குறிமுறைவரிகளை ஒப்பிடும் போது, கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு மிக முக்கியமான செய்தி இந்த அரைப்புள்ளிமட்டுமேயாகும்.
ஜாவாவில், அரை
புள்ளியைப் பயன்படுத்துவது கட்டாயமாகும், இல்லையெனில் நிரலாக்கத்தின்போது திரையில் ஏராளமான அளவில் பிழைகளை சுட்டிகாட்டிகொண்டே இருக்கும்.
மறு
தலையாக, பைத்தானில் நிரலாக்கத்தின்போது குறிமுறைவரிகளுக்கு இடையே அரைபுள்ளியைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே யில்லை,.
7. நிரலாக்கத்தின்நடைமுறை பயன்பாடு
நிரலாக்கத்தின் போது எந்த நிரலாக்க மொழியையும் தேர்வு செய்வதற்குமுன் ஒருகணினி மொழியின் உண்மையான உலக பயன்பாடுகள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு மிக முக்கியமான அளவுருவாகும்,
அதனடிப்படையில் ஒப்பிடும்போது பைதான் , ஜாவா ஆகிய இரண்டிலும் ஏராளமானஅளவில் உண்மையான உலக பயன்பாடுகள் உள்ளன. அதாவது
அண்ட்ராய்டு பயன்பாடு
களை மேம்படுத்துதல், இணைய பயன்பாடுகள், மீப்பெரும் தரவுகளை கையாளுதல், பொருட்களுக்கான இணையம்( Internet of Things( IoT)), விளையாட்டுகளை மேம்படுத்துதல் மேஜைக்கணினி பயன்பாடுகள் ஆகியவற்றை உருவாக்குவதற்கு ஜாவா எனும் கணினிமொழி பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
மறு
தலையாக, இணையத்தை மேம்படுத்துதல், இயந்திர கற்றல், தரவு அறிவியல், பொருட்களுக்கான இணையம்( Internet of Things( IoT)), பூஜ்ஜிய பாதுகாப்பு, வரைகலை பயனாளர் இடைமுகம்செய்தல்(GUI ) விளையாட்டுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை உருவாக்குவதற்கு பைதான்எனும் கணினிமொழி பெரிதும் பயன்படுத்தப்படுகிறது
8. நிலையான நூலகம்
பைதான் , ஜாவா
ஆகிய இரண்டிலும் ஏராளமானஅளவில் நிலையான நூலகங்கள் உள்ளன. இருப்பினும், பைத்தானுக்கும் ஜாவாவுக்கும் இடையில் ஒரு ஆழமான ஒப்பீட்டைச் செய்யும்போது பைத்தானில் அதிகமான நிலையான நூலகங்கள் உள்ளன ஜாவாவில் மிகவும் குறைவான அளவிலேயே நிலையான நூலகங்கள் உள்ளன.
9. சமூக குழுக்களின்ஆதரவு
பைதான் , ஜாவா
ஆகிய இரு கணினி மொழிகளும் மிகவும் பிரபலமானவை வளமானவை என்பதால், அவற்றைக் இணையத்தில் நேரடியாக கற்றுக்கொள்வதற்கானஆதாரங்கள் ஏராளமாக உள்ளன.அதாவது பைதான், ஜாவா ஆகிய இரு நிரலாக்கமொழிகளைக் கற்க ஏராளமான மன்றங்கள், வலைப்பதிவுகள் இலவச கானொளிகாட்சி கல்விவாய்ப்புள் உள்ளன..எனவே, பைதான் , ஜாவா ஆகிய இரண்டுமே சிறந்த சமூக குழுஆதரவைக் கொண்டுள்ளன.
10. வேலைவாய்ப்புகளும் சம்பளமும்
பொதுவாக , “ஜாவா எல்லா இடங்களிலும் உள்ளது” என்பதே உண்மையான நிலையாகும்.மேலும் ஏராளமான செயல்திட்டங்கள் ஏற்கனவே அதில் கட்டப்பட்டுள்ளன. எனவே, ஜாவா தொடர்பான பணிகள் எப்போதும் இருந்துகொண்டே உள்ளன.அமெரிக்காவில் ஜாவா மேம்படுத்துநரின் சராசரி சம்பளம் $ 104474 ஆகும்.
மறுபுறம், பைதான் ஒரு நவீன
நிரலாக்க மொழியாகும், மேலும் எதிர்காலத்திலும் பைதானில் ஏராளமான வாய்ப்புகள் தயாராக உள்ளன. அதுமட்டுமல்லாது தற்போது பல்வேறு நிறுவனங்களும் பைத்தானுக்கு மாறிகொண்டிருக்கின்றன, மேலும் பல்வேறு செயல்திட்டங்கள் ஏற்கனவே அதில் கட்டப்பட்டுள்ளன.
எனவே, பைத்தானின்
பணிவாய்ப்புகள் கிடைப்பது எந்த நிரலாக்க மொழியையும் விட அதிகமாகும்.
அமெரிக்காவில் பைதான்
மேம்படுத்துநரின் சராசரி சம்பளம் $ 118765. ஆகும்
இந்த பத்து கருத்துகளின் அடிப்படையில் எந்தவொரு நபரும் இவ்விரண்டில் எதுசிறந்தது என முடிவுசெய்து கொள்க.

%d bloggers like this: