படங்களை ஒப்பிடுதல் – Geeqie

இரண்டு படங்களை சாதரணமான Image viewers-ஐக் கொண்டு ஒப்பிடுவது சுலபம் அல்ல. முதலில் ஒரு Image viewer(Eye of Gnome, Ristretto) கருவியை இரு சாளரமாகத் திறந்து அதில் இரண்டு படங்களை ஏற்றி, அவ்விரு சாளரங்களையும் தேவையான அளவிற்கு வைத்த பின்னரே ஒப்பிட இயலும். இவ்வாறு ஒப்பிட்டால் படத்தில் உரு அளவு பெரிதாக்கு(zoom in), உரு அளவு சிறிதாக்கு(zoom out) போன்ற செயல்களை இரு சாளரங்களிலும் தனித்தனியாக செய்ய வேண்டும். மேலும் இந்த அமைப்பை சேமிக்காவிட்டால் மீண்டும் ஒப்பிடும் போது மேல் சொன்ன அனைத்தையும் மறுபடியும் செய்ய வேண்டும்.

குனு/லினக்ஸ் இயக்குதளங்களை உபயோகிப்போர் ‘Geeqie image viewer’ என்னும் கருவியைக் கொண்டு படங்களை சுலபமாக ஒப்பிடலாம்.

உபயோகப்படுத்தும் முறை:

1. ஒரு சாளரத்தில் Geeqie’ கருவியைத் திறந்து கொள்ளவும்.

2. திறக்கப்பட்டசாளரம் மூன்ற பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.அதில் படம் இருக்கும் கோப்பகத்தின் வடிவ அமைப்பு இடது பக்கத்தின் மேற்புறமும், அக்கோப்பகத்தில் இருக்கும் கோப்புகளை இடது பக்கத்தின் கீழ் புறமும், திறக்கப்பட் படம் வலது பக்கமாகவும் அமைந்திருக்கும்.

3. கோப்பக பிரிவின் மூலம் படங்கள் இருக்கும் கோப்பகத்திற்கு செல்லவும், அக்கோப்பகத்தில் அமைந்துள்ள கோப்புகள் வரிசையாக காண்பிக்கப்படும். அவ்வரிசையில் இருந்து ஒப்பிட வேண்டிய படங்களைத் தேர்ந்தெடுக்கவும்.(ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்த பின் மற்றொன்றை தேர்வு செய்ய “ctrl” விசையை அழுத்தி தேர்ந்தெடுக்கவும்)

4. இரண்டு படங்களும் திறக்கப்பட்ட பின் “view” பட்டியிலிருந்து “split” என்னும் உருப்படியை தேர்ந்தெடுக்கவும், இதில் நிறைய விருப்பங்கள் காண்பிக்கப்படும். அதில் மேலும்-கீழும் , வலது-இடது பக்கம்(top-and-bottom or side-by-side) ஆகிய

விருப்பங்கள் படங்களை மேலும் கீழுமாகவும் அல்ல வடது இடது புறமாகவும் காட்ட உதவும் . தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப இரு படங்களும் காண்பிக்கப்படும். ‘e’ என்னும் விசையை அழுத்தினால் குறுக்கு வழியில் இரு படங்களையும் மேலும் கீழுமாக திறக்கலாம்.

“view” பட்டியிலிருந்து “split” என்னும் உருப்படியில் உள்ள “quad” என்னும் விருப்பத்தின் மூலம் நான்கு படங்களை ஒப்பிடலாம்.

இடது பக்கத்தில் உள்ள பிரிவினை மறைக்க அல்ல காண்பிக்க(to toggle) “ctrl+h” விசைகளை சேர்த்து அழுத்தவும். இதன் மூலம் படத்தை முழு சாரளம் அளவிற்கு பார்க்கலாம்.

கோடிட்டு காட்டப்பட்டுள்ள பகுதி செயற்படு படம்(active image). கோடிட்டு காட்டப்பட்டுள்ள படத்தின் உரு அளவை பெரிதாக்க “=” விசையையும் , உரு அளவை சிறிதாக்க “-“ விசையையும் உபயோகப்படுத்தலாம்.

இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் உரு அளவைப் பெரிதாக்க(zoom in) “+” விசையையும், உரு அளவை சிறிதாக்க(zoom out)“-“விசையையும் உபயோகப்படுத்தலாம்.

படங்களை தனித்தனியாக நகர்த்த அம்புகுறி விசைகளை(arrow keys) உபயோகப்படுத்தலாம். இரண்டு படங்களையும் சேர்த்தது போல் நகர்த்த “shift” மற்றும் அம்புகுறி விசையை ஒரே நேரத்தில் அழுத்தவும். இக்கருவியில் பல சிறப்பியல்புகள் உள்ளன. உரு அளவு பெரிதாக்கு(zoom in), உரு அளவு சிறிதாக்கு(zoom out) ஆகிய செயல்களை சுட்டி மூலமாகவும் செய்யலாம். மேலும் உபயோகப்படுத்த சுலபமாகவும், இயக்குதளத்தில் கனமற்றதாகவும் இக்கருவி செயல்படும்.

ஆங்கிலமூலம் ; www.freesoftwaremagazine.com/articles/compare_two_images_easily_geeqie

~அன்னபூரணி

%d bloggers like this: