குறிமுறைவரிகளில்லாத((No Code) முதன்மையான திறமூல கருவிகள்(Tools)

அறிமுகம்
“ஒரு குறிமுறைவரிகளில்லாத மேம்படுத்திடும் தளமானது, நிரலாளர்கள், நிரலாளர்கள் அல்லாதவர்கள், பாரம்பரிய கணினி நிரலாக்கத்திற்கு பதிலாக வரைகலை பயனாளர் இடைமுகங்கள் , உள்ளமைவு மூலம் பயன்பாட்டு மென்பொருளை உருவாக்க அனுமதிக்கிறது.” ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி இவ்வாறான பல்வேறு மென்பொருள் கருவிகளும் , பயன்பாடுகளும் உருவாக்கப் பட்டு பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன. “அவர்கள் அதை எவ்வாறு உருவாக்கு கின்றார்கள்?” என நீங்களே உங்களுக்குள் கேட்டுக்கொள்ளலாம்.
பல மேம்படுத்துநர்கள் ஒவ்வொரு நாளும் முடிவில்லாத குறிமுறைவரிகளை எழுதுகின்ற ஒரு வளர்ந்துவரும் படபிடிப்புநிலையத்தினை காட்சிப்படுத்தலாம். சில சந்தர்ப்பங்களில், அது உண்மையாக இருக்கலாம், ஆனால் கருவிகளை மேம்படுத்திடுவதற்காக எந்த நிரலாக்க அறிவையும் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான்.
இணைய அடிப்படையிலான அல்லது கைபேசி பயன்பாடுகள் , மென்பொருளை, குறிமுறைவரிகளில்லாத கருவிகளைப் பயன்படுத்தி நாமே உருவாக்கலாம். இந்த கட்டுரையில், அவ்வாறானவைகளுள் சிறந்த கருவிகளில் சிலவற்றை காண்போம். அவை , அவற்றின் நோக்கம் , அவற்றைப் பயன்படுத்து வதற்கான சிறந்த வழி ஆகியவற்றை காண்போம்.நம்முடைய சிந்தனைகளை உலகின் நடைமுறை பயன்பாட்டில் கொண்டுவருவதற்காக இனி கணினிஒரு அனுபவம் வாய்ந்த மேம்படுத்தநராக இருக்க வேண்டியதில்லை!
குறிமுறைவரிகளில்லாத கருவிகள் எவ்வாறு செயல்படுகின்றன
குறிமுறைவரிகளில்லாத கருவிகள் பிரபலமாவதற்கான அடிப்படை காரணம் என்னவென்றால்,கணினியில் நமக்குத்தேவையான எந்தவொரு புதிய பயன் பாட்டினையும் உருவாக்குவதற்காகவென பல குறிமுறைவரிகளை, எழுத்துக்களை ,எண்களைக் கொண்ட கருப்பு வெள்ளைத் திரையை நாம் வெறித்துப் பார்க்க வேண்டியதில்லை. குறிமுறைவரிகளில்லாத கருவிகளைச் சுற்றியுள்ள முழு கருத்து என்னவென்றால்,நாம் நம்முடைய பயன்பாட்டை வரைகலை இடைமுக சூழலில் உருவாக்கிகொள்ளலாம் என்பதேயாகும். நம்முடைய பயன்பாட்டினை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடியதாக மாற்றுவதற்காக, இழுத்துசென்று விடுதல் எனும் ஒரு எளிய வழிமுறையேப் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது. “பயன்பாட்டிற்கான குறிமுறைவரிகளின் எதிர்காலம் குறிமுறைவரிகளே இல்லாததாகும்.” என GitHub இன் CEO கூட ஒருமுறை கூறினார்:
எனவே, குறிமுறைவரிகளில்லாத கருவிகளின் மூலம், நாம் நமக்குத்தவையான பயன்பாடுகளை உருவாக்குவதற்காக குறிமுறைவரிகளையே எழுத வேண்டியதில்லை என்பதாகும். முக்கியமானது என்னவென்றால், ஒவ்வொரு முறையும் நாம் குறிமுறைவரிகளில்லாத(NoCode) இயங்குதளத்தைப் பயன்படுத்தும்போது,நாம் பயன்படுத்தும் தளத்திற்குப் பின்புலத்தில் மேம்படுத்துநர்களால் ஏற்கனவே உருவாக்கப்பட்டு நாம் பயன்படுத்த தயார்நிலையில் உள்ள மென்பொருட்களைமட்டுமே பயன்படுத்திகொள்கின்றோம் என்பதேயாகும். நாம் நமக்குத்தேவையானவற்றை இழுத்து சென்று விடுகின்ற அல்லது நம்முடையசெயல் திட்டத்துடன் இணைக்கின்ற ஒவ்வொரு மென்பொருளையும் அதற்கான மேம்படுத்துநர்கள் ஏற்கனவே உருவாக்கி நாம் பயன்படுத்துவதற்காக தயாராக வைத்துள்ளனர். நம்மால் எழுதப்படாத ஆனால் அதற்கான குறிமுறைவரிகளை மட்டும் நாம் நமக்கான பயன்பாடுகளை உருவாக்கி கொள்வதற்காக அவற்றை பயன்படுத்திகொள்கின்றோம்,ஆனால் அவை நம்முடைய கண்ணுக்கத்தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ளன, நாம் அவ்வாறான குறிமுறைவரிகள் எதையும் தனியாகமுயன்று எழுத வேண்டிய தில்லை.
எளிமையாகச் சொல்வதென்றால், குறிமுறைவரிகளில்லாத கருவிகளின் மூலம், நாம் அதற்கான மூலக் குறிமுறைவரிகளை நம்முடைய பார்வைக்குக் கொண்டுவராமலேயே அதனை கையாளுகின்றோம். இந்தக் கருவிகளில் பெரும்பாலானவை பயன்படுத்தக்கூடிய ஆயிரக்கணக்கான விரிவாக்கங்களையும் கூடுதலான உள்ளிணைப்புகளையும் கொண்டுள்ளன. இந்த வழிமுறையில், நாம் இணையம்,கைபேசி பயன்பாடுகளுக்கான பின்புல, முன்புற மென்பொருட்களை உருவாக்கலாம். இதன்வாயிலாக குறிமுறைவரிகளில்லாத கருவிகளிலிருந்து எவ்வாறு பயனடையலாம் என்பது தெளிவாகத் தெரிகிறது.ஆனால்,இந்த கருவிகளில் சில நன்மைகளும் தீமைகளும் உள்ளன அவற்றை இப்போது காண்போம்

குறிமுறைவரிகளில்லாத கருவிகளின் நன்மைகள்
குறிமுறைவரிகளை எழுதுகின்ற அனுபவம் இல்லாதவர்கள்கூட கைபேசி பயன்பாடுகளை உருவாக்குதல்.
மிகக் குறைவான , குறிமுறைவரிகளைஎழுதும் அனுபவம் இல்லாதவர்கள்கூட இணையப் பயன்பாட்டை உருவாக்குதல்.
குறிமுறைவரிகளின் கொள்கைகளை சிறப்பாக புரிந்துகொள்ளுதல்.
பெரிய பன்முகத்தன்மை , எளிதாக இழுத்து விடுவதன் மூலம் பயன்பாடுகளை மாற்றியமைக்கும் திறன். அதனால் பயன்பாடுகளின் மேம்படுத்துநர்கள் தேவைப்படாமல் போகலாம் என்பதால் அதற்கானவளங்களைச் சேமித்தல்.
ஆகியவை இவைகளின் நன்மைகளாகும்

குறிமுறைவரிகளில்லாத கருவிகளின் தீமைகள்
குறிமுறைவரிகளில்லாத கருவிகள் எவ்வளவு பயனுள்ளதாகவும் மேம்பட்டதாகவும் இருந்தாலும், நாம் விரும்பும் வகையில் நம்முடைய பயன்பாட்டை உருவாக்க முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.
வேறொருவர் எழுதிய குறிமுறைவரிகளைப் பயன்படுத்துவதில் சாத்தியமான பல்வேறுபாதுகாப்பு அபாயங்கள் குறுக்கிடக்கூடும். அதாவது தீங்கிழைக்கும் நோக்கத்தை மனதில் கொண்ட ஒருவர் குறிமுறைவரிகளின் துனுக்குகளை இந்த கருவிகளில் புகுத்துகிறார் எனக்கொள்வோம். அதனால் ஏதாவதுபிரச்சனை உருவாக வாய்ப்புகள் அதிகம்.ஆகியவை இவைகளின் தீமைகளாகும்

குறிமுறைவரிகளில்லாத கருவிகள் என்ன என்பதையும் அவை தற்போதைய இணையம் ,கைபேசி ஆகிய பயன்பாடுகளின் மேம்பாட்டை ஏன் பாதிக்கின்றன என்பதையும் இப்போது நாம் நன்கு புரிந்துகொண்டுள்ளோம், சந்தையில் மிகவும் பிரபலமான சில திறமூலக்கருவிகளை இப்போது காண்போம்அவை பின்வருமாறு.
திறமூல குறிமுறைவரிகளில்லாத கருவிகள்
1.N8n என்பது ஒரு பணிப்பாய்வு தானியங்கி கருவியாகும், இது பயன்பாடுகளை எந்தவொரு API உடனும் இணைக்க அனுமதிக்கிறது.இதில் பயனர் நட்பு இடைமுகம் இருப்பதால் இதைப் பயன்படுத்துவது எளிதானது, எனவே நாம் நமக்கான பயன்பாட்டினை உருவாக்கிடுவதற்கான குறிமுறைவரிகளை எழுதவதற்காகவென ஒரேயொரு வரியைகூட அறிந்துகொள்ள வேண்டியதில்லை! இந்த NoCode கருவியில் 170 க்கும் மேற்பட்ட வெவ்வேறு முனைமங்கள் உள்ளன, அவை பணிப்பாய்வுகளை தானியங்குபடுத்துகின்றன. இந்த n8n பற்றிய செய்தி என்னவென்றால், இது மேககணினி அடிப்படையிலானது அன்று. நாம் அதை நம்முடைய சேவையாளரில் நிறுவுகை செய்து அனைத்து தரவுகளையும் நம்முடைய வளாக தரவுத்தளத்திலேயேகூடநாம் வைத்திருக்கலாம். இது பாதுகாப்பை அதிகரிக்கிறது , சுற்றுச்சூழலின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. நாம் n8n ஐ பயன்படுத்திகொள்வதற்காகவென . நாம் 1.இதை ஒரு docker கொள்கலனாக இயக்கலாம், 2.இதை npm உடன் நிறுவலாம் அல்லது 3.ஒரு சுருங்கைவழியில் தொடங்கலாம் என்றவாறு மூன்று வாய்ப்புகள் உள்ளன.மேலும் N8n ஆனது : 1.இணைப்பு, 2.முனைமம்(node) , 3.தூண்டுதல்முனைம்ம், 4.பணிப்பாய்வு. ஆகியநான்கு முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது
1.இதனுடைய இணைப்பு கூறானது மிகவும் நேரடியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நமது முனைமங்களை(nodes) இணைக்கிறது. முனைமங்கள் ஒரு இணைப்பிற்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்பதால், அவற்றில் எத்தனைமுனைமங்களைவேண்டுமானாலும் நாம் வைத்திருக்கலாம்.
2.முனைம கூறு என்பது நமது தரவு செயலாக்கப்படும் ஒரு நுழைவுப் புள்ளியாகும். நம்முடைய இணையம் அல்லது கைபேசி பயன்பாடுகள் பல வழிகளில் இணைக்கக்கூடிய பல முனைமங்களைக் கொண்டிருக்கலாம்.
3.தூண்டுதல் முனைம கூறு என்பது பணிப்பாய்வு தொடங்குவதற்கான சமிக்ஞையை வழங்குகின்ற முனைமமாகும். வெளிப்புறச் சேவையிலிருந்து நேரம், Webhook அல்லது நிகழ்வு ஆகியவற்றின் பணிப்பாய்வுகளை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, இணையப் பயன்பாட்டில் உள்ள தேடல் பொத்தானை யாராவது சொடுக்குதல் செய்தால், இந்த தூண்டுதல் முனைமமானது பணிப்பாய்வு தொடங்குவதற்கான சமிக்ஞையைப் பெறுகிறது, இறுதியில் கொடுக்கப்பட்ட தேடலைச் செயல்படுத்துகிறது.
4.பணிப்பாய்வு கூறு என்பது n8n இன் முக்கிய அம்சமாகும். இது ஒரு எளிய செயல்முறையாகும், இது தூண்டுதல் முனைமமானது செயல்படுத்தல் தொடங்கி, முனைமங்களுக்கு இடையில் தரவு செயலாக்கம் ஆனதும் நிகழ்கின்ற செயலாகும்.
முடிவாக இந்த n8n பற்றிய மேலும் கூடுதல் விவரங்களுக்கு தேவையான ஆவணங்கள் GitHubஇன் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் அல்லது , n8n இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன.

2.Saltcorn என்பது மிகவும் பிரபலமான மற்றொரு திறமூல கருவியாகும். பொதுவாக பயன்பாடுகளை உருவாக்குவதற்காக தரவுத்தளங்களை நம்பியிருப்பதால், இந்த மென்பொருளானது அவைகளை பயன்படுத்திகொள்வதற்காக சற்று தந்திரமாக செயல்படுகின்றது. இது மற்ற மென்பொருட்களுடன் PostgreSQL, node.js ஆகியவற்றினை இணைத்துப் பயன்படுத்திகொள்கிறது, இது அதை இயக்குவதற்கு அவசியமானது. பயன்பாட்டின் முழுமையான பின்புலதளத்தினையும்(backend), முன்பக்க(frontend) தரவுத்தளத்தையும் உருவாக்க N8n பயன்படுத்திகொள்ளலாம். இது ஒரு எளிய சொடுக்குதல், இழுத்து சென்றுவிடுல் நுட்பத்தால் கட்டுப் படுத்தப் படும் மிகவும் உள்ளுணர்வுடன்கூடிய பயனாளர் இடைமுகத்தையும் பயன்படுத்தி கொள்கிறது.
Saltcorn.com இல், இந்தக் கருவியின் பல குத்தகைதாரர் நிகழ்வு இயங்குகிறது. துணை களப்பெயரின் கீழ் நம்முடைய சூழலையும் தரவுத்தளத்தையும் உருவாக்க நமக்கு சுதந்திரம் உள்ளது, ஆனால் இதில் பாதிப்புகளைத் திறக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதங்களும் உள்ளன. இந்தக் கருவியைப் பயன்படுத்த தேர்வுசெய்தால், முழுமையான கட்டுப்பாட்டைப் பெற, சேவையாளரில் இதை புரவலராக செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது. தற்போது இதனுடைய பல தனிப்பட்ட சேவையாளர் செயல்திட்டங்களில் ஒரு சிறப்பு அறிமுக சலுகையை வழங்கபபடுகின்றது, அதில் இருந்து நாம் நம்முடைய தளத்தினை மேம்படுத்தி க்டடமைக்கலாம்.
இதனுடைய முனைமத்தையும் npm யையும் பயன்படுத்தி தொகுப்புகள் வழியாக நிறுவப்பட்டது அல்லது மூலத்திலிருந்து நிறுவப்பட்டது. இதனுடையநிறுவுகை செயல்முறைகள் சில பயனுள்ள குறிமுறைவரிகளின் உதவிக்குறிப்புகளுக்கு GitHubஇன் அதிகாரபூர்வ பக்கத்திற்குசெல்லுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது.

3.Rintagi என்பது முதன்முதலான திறமூல குறைந்த குறிமுறைவரிகளின் மேம்பாட்டு கருவிகளில் ஒன்றாகும்.இதன் மூலம், மிகவும் திறமையான மேம்படுத்துநர்கள் குழு இதை உருவாக்கியது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் அழகான, பயன்படுத்த எளிதான பயன்பாடுகளை உருவாக்கலாம். Rintagi ஐ மிகவும் தனித்துவமாக்குவது என்னவென்றால், பயன்பாடு பயன்படுத்தும் ஒரு குறிமுறைவரி காலாவதியாகி விட்டால் அல்லது முழுமையாக நீக்கப்பட்டால், அது தானாகவே புதுப்பிக்கப்படும். Rintagi மென்பொருளைப் புதுப்பிக்க, மீப்பெரும் தரவுகளிலிருந்து(metadata) நேரடியாக அதன் உருவாக்கத் தகவலைப் பயன்படுத்துவதால் அது நிகழ்கிறது. பயன்பாட்டை உருவாக்கும்போது மற்ற NoCode கருவிகளைப் போலவே இந்த Rintagi ஆனது இழுத்து சென்று விடுதல்எனும் ஒரு எளிய இடைமுகத்தைப் பயன்படுத்துகிறது.
Rintagi எனும் NoCode கருவியின் முக்கியவசதிவாய்ப்புகள் அதிக உற்பத்தித்திறன், தானியங்கி புதுப்பிப்புகளின் காரணமாக எதிர்கால ஆதார தளம், செயல் திட்டங்களை அளவிடும் அபார திறன் , செயல் திட்டங்களின் மீதான அதிக கட்டுப்பாடு ஆகியவைகளாகும். Rintagi கொண்டிருக்கும் மற்றொரு முக்கியமான திறன் அதன் உற்பத்திக்கு தயாராக உள்ள பயன்பாடுகள் ஆகும். இவை முன்னரே கட்டமைக்கப்பட்ட மாதிரிபலகங்கள், மனிதவள மேலாண்மை பயன்பாடுகள், ஊதிய பயன்பாடுகள் அல்லது செலவு அறிக்கையிடல் ஆகியவற்றிற்காக மாற்றியமைக்க முடியும்.
முன்நிபந்தனைகள்
, Rintagiஆனது பின்வரும் விண்டோ இயங்குதளங்களில் மட்டுமே செயல்படுகின்ற திறன்கொண்டது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, 8.0, 8.1 அல்லது 10 சமீபத்திய சேவையின்கட்டுகள்
மைக்ரோசாப்ட் விண்டோ சேவையாளர் 2008(32 அல்லது 64 பிட்) /2008 ஆர்2 (32 அல்லது 64 பிட்) 2012 (64 பிட்) /2012 ஆர்2 (64 பிட்) அனைத்து பதிப்பும் சமீபத்திய சேவையின் கட்டுகள்
IIS 6.0/7.0/7.5/8.5
Rintagi இன் சரியான பயன்பாட்டிற்கான மென்பொருள் தேவைகள் வரும்போது, நமக்கு இது தேவைப்படும்:
Google Chrome உலாவி / IE உலாவி 9.0 அல்லது அதற்குப் பிறகு / Firefox உலாவி 40.0 அல்லது அதற்குப் பிறகு
மைக்ரோசாஃப்ட் விஷுவல் ஸ்டுடியோ 2010 எக்ஸ்பிரஸ் அல்லது அதற்கு மேற்பட்டது (மேம்பாடு அமைப்பு மட்டும்)
Microsoft .NET Framework 3.5 அல்லது 4.5.2 உடன் SP1 அல்லது அதற்கு மேற்பட்டது
Microsoft SQL Server® 2012 அம்சப் பொதி (Microsoft® SQL Server® 2012க்கான Microsoft® சிஸ்டம் CLR வகைகளைத் தேடி, x64 தொகுப்பைப் பதிவிறக்கவும்)
மைக்ரோசாஃப்ட் அறிக்கை பார்வையாளர் மறுவிநியோகம் 2012 (32பிட் அல்லது 64பிட்)
கிரிஸ்டல் அறிக்கை இயக்க நேரம் 13 தொகுப்பு
Microsoft Access Database Engine 2013 (32bit அல்லது 64bit)
மைக்ரோசாஃப்ட் SQL சர்வர் எக்ஸ்பிரஸ் 2008/2008 R2/2014 (32 அல்லது 64 பிட்) சமீபத்திய சர்வீஸ் பேக் அல்லது Microsoft SQL 2008/2008/2014 எக்ஸ்பிரஸ் பதிப்பு, சமீபத்திய சர்வீஸ் பேக் (பொதுவாக மேம்பாட்டிற்கு மட்டும்)
SQL சேவையாளர் மேலாண்மை படபிடிப்பு தேவைகளின் முழுமையான பட்டியல் Rintagiஇன் ஆவணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. Rintagiஇல் தொழில்முறை உரிமங்களும் நிறுவன உரிமங்களும் உள்ளன, ஆனால் Rintagi இன் கட்டணமற்ற பதிப்பு “community version” ஆகும். இந்த சமூக பதிப்பிற்கான நிறுவுகைசெய்வதற்கான வழிமுறைகள் GitHubஇன் நிறுவுகை வழிகாட்டியில் உள்ளன.

4.OSBPP என சுருக்குபெயரால் அழைக்கப்பெறும் செந்தர திறந்த வியாபார தளம்(Open Standard Business Platform)என்பது மிகவும் மதிக்கப்படும் OS.bee இன் குழுவால் இயக்கப்படும் பதிப்பாகும். OS.bee என்பது மென்பொருள் பொறியியலுக்கான ஒரு தளமாகும், இது தானியங்கி பயன்பாட்டின் மேம்பாட்டிற்கான குறைந்த குறிமுறைவரிகள்/குறிமுறைவரிகளில்லாத சூழலை இணைக்கிறது. இது களப்பெயர்-குறிப்பிட்ட மொழிகளை அடிப்படையாகக் கொண்டது, இது OSBP ஐ முழு- stack இன் குறைந்த குறிமுறைவரிகள்/ குறிமுறைவரிகளில்லாத மேம்பாட்டுக் கருவியாகக் குறிப்பிடுகிறது.
OSBP வழங்கும் வசதிகளில் ஒன்று, இதனை கற்றுக்கொள்வது சிரமமற்றது. கைக்கணினிகள், கைபேசிகள்,மேசைக்கணினிகள் போன்ற பல சாதனங்களுக்கான பயன்பாடுகளை உருவாக்க இது ஜாவா நிரலாக்க மொழியைப் பயன்படுத்தி கொள்கிறது. இது 10,000 க்கும் மேற்பட்ட பயனாளர்களுடன் ஒரு பெரிய சமூக குழுவின் ஆதரவு தளத்தையும் கொண்டுள்ளது. OSBP பயன்படுத்தும் முதன்மைக் கருவி “OSBP மென்பொருள் தொழிற்சாலை” என்று அழைக்கப்படுகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ள, நம்முடைய கணினியில் ஜாவா , Eclipse Neonஆகியன நிறுவப்பட்டிருக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மென்பொருள் பதிப்புகளுடன் நிறுவுகைசெய்வதற்கான வழிகாட்டி இதனுடைய அதிகாரபூர்வஇணையதளத்தில் உள்ளது.
பொதுவாக, இதனை நிறுவுகைசெய்திடுகின்ற செயல்முறை பின்வருமாறானஐந்து படிமுறைகளைக் கொண்டுள்ளது:
1.முதலில் ஜாவாவை நிறுவுகைசெய்தல்
2.பின்னர் Eclipseஐ நிறுவுகைசெய்தல்
3 அதன்பின்னர் களஞ்சிய (repository) இணைப்பைப் பதிவிறக்கம் செய்தல்
4. பிறகுOSBP ஐ நிறுவுகைசெய்தல்
.5.இறுதியாக இலக்கு தளத்தை அமைத்தல்
நிறுவன விளக்கப்படங்களை உருவாக்குதல், வணிக பகுப்பாய்வு மென்பொருளை உள்ளமைத்தல், விற்பனைத் தீர்வுகளை (POS) உருவாக்குதல் , பயனர் இடைமுகங்களை உருவாக்குதல். ஆகியன OSBP ஆல் உருவாக்கப்பட்ட சில எடுத்துக்காட்டுகளாகும்.

5.Manychat இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த குறிமுறைவரிகளில்லாத கருவியானது, இது பல முகநூல் செய்தியாளர்(bots) உருவாக்க அனுமதிக்கிறது. இந்த Manychat மூலம், பார்வையாளர்களின் தொடர்புகளை அதிகரிக்கும் , அதிக சாத்தியமான வாங்குபவர்களை உருவாக்கும் தானியங்கி செய்தி பதில்களை விரைவாக உருவாக்க முடியும். தயாரிப்புகள் பற்றிய தானியங்கி செய்திகளை உருவாக்கலாம், முன்பதிவு செய்யலாம், கூப்பன் குறியீடுகளை அனுப்பலாம் அல்லது நம்முடைய வணிகத்தைப் பற்றிய கூடுதல் தகவலைப் பகிரலாம். இந்த கருவியின் முக்கிய கவனம் முதன்மையாக விற்பனையும் சந்தைப்படுத்தலும் ஆகும். முன் வரையறுக்கப்பட்ட வார்ப்புருக்கள் சில நிமிடங்களில் முதல் botஐ உருவாக்க அனுமதிக்கின்றன. 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதனைப் பயன்படுத்திகொள்கின்றனர் இதனுடைய கட்டணமற்றப் பதிப்பானது, காட்சி ஓட்டத்தை (visual flow) உருவாக்குபவர், landing பக்க வாய்ப்புகள், அடிப்படை வார்ப்புருக்கள், சாத்தியமான வாங்குபவர்களின் பிரிவு , பலவற்றை உள்ளடக்கிய பல வாய்ப்புகளுடன் வருகிறது. Zapier, Shopify, Mailchimp , PayPal போன்ற பிற பிரபலமான மென்பொருள் கருவிகளுடன் பயனாளர்கள் இந்தManychat ஐ ஒருங்கிணைக்க முடியும். இதற்கு எந்த நிறுவுகையும் செய்யத்தேவையில்லை. அதற்காக ஒரு கணக்கை மட்டுமஉருவாக்கினால் போதும்.

6.Budibase என்பது வணிகப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான குறைந்த-குறிமுறைவரிகளின் தளமாகும், ஒரு காட்சி இடைமுகத்தைப் பயன்படுத்தி இணையப் பயன்பாட்டின் பின்தளத்தை (தரவுத்தளம், மாதிரிகள், பதிவுகள்) அமைத்து, அதை ஒரு காட்சிவடிகட்டி மூலம் நம்முடைய முன்புற முனைமத்துடன் இணைக்கலாம்.
இது ஒரு திறமூல குறைந்த-குறிமுறைவரிகளின் இயங்குதளமாகும் ,இது ஒரு உள்ளக கருவியை உருவாக்கி, தொழில்நுட்பக் குழுக்கள் தங்கள் பணியிடத்திற்கான பயன்பாடுகளை நிமிடங்களில் உருவாக்க உதவுகிறது.
Budibase என்பது வணிக பயன்பாடுகளை உருவாக்குவதற்கான அனைத்து வசதிகளும் ஒரேஇடத்தில்(all-in-one) எனு்ம்வசதியுடனான திறமூல குறைந்த-குறிமுறைவரிகளின் தளமாகும். இது6 மாதங்களில் 35,000 க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள் , Github இல் 3,000 நட்சத்திரங்களுக்கு மேல் கொண்டது, இது ஒரு நல்ல காரணத்திற்காகமுன்னணி திறமூல குறைந்த குறிமுறைவரிகளின் இயங்குதளமாக மாறி வருகிறது .
Budibase மூலம், பயனாளர்கள் தங்கள் உள்கட்டமைப்பில் சில நிமிடங்களில் பயன்பாடுகளை வடிவமைக்கவும், உருவாக்கவும், தானியங்கிபடுத்தவும் பயன்படுத்தவும் முடியும்.
பயனாளர்கள் Budibase இன் உள்ளக தரவுத்தளத்திலிருந்து பயனடையலாம் அல்லது தங்களுடைய சொந்ததரவுதளத்துடன் இணைக்கலாம் .Budibase ஆனது MongoDB, PostgreSQL, MySQL, Elasticsearch, Airtable உட்பட பல வெளிப்புற தரவு மூலங்களை ஆதரிக்கிறது,
Budibase இன் வடிவமைப்புப் பிரிவில், பயனாளர்கள் தங்கள் தரவை விரைவாக இணைக்கக்கூடிய முன் கட்டமைக்கப்பட்ட, சக்திவாய்ந்த கூறுகளின் பட்டியலிலிருந்து பயனடையலாம். முன் கட்டமைக்கப்பட்ட தளவமைப்புகள், பயனர் அங்கீகாரம் , ஒரு சில சொடுக்குதல்களில் தரவை வடிகட்ட, வரிசைப்படுத்த, பக்கமாக்க பயனாளர்களை அனுமதிக்கின்ற தரவு வழங்குநர் கூறுகளுடன் வெளியிடபட்டு வருகிறது!
பயனாளர்கள் Sendgrid, Zapier, Integromat போன்ற பலவற்றை உள்ளடக்கிய பல முன்கூ்டடியே கட்டமைக்கப்பட்ட தானியங்கியான செயலை அணுகலாம் அல்லது webhook ஐப் பயன்படுத்தலாம். தானியங்கிகளை உருவாக்க, தரவு மூலங்களுடன் முழுமையாக ஒருங்கிணைக்க எளிதானது. ஒருங்கிணைப்புகளில் ஜாவா உரைநிலைச் சேர்ப்பதும் சாத்தியமாகும், இது விரிவாக்கபுத்தன்மையை அதிகரிக்கிறது.
Budibase ஆனது முதன்மையான வணிக பயன்பாடுகளுக்கானது, மேலும் நிர்வாக பலகங்கள் முகப்புதரைகள் முதல் ஒப்புதல் பயன்பாடுகள் , இருப்பு பட்டியல்கள் வரையிலான வழக்குகளைப் பயன்படுத்திகொள்கிறது.
Github Repo Github நட்சத்திரங்கள் – 3.2k செயலில் பராமரிக்கப்படுகிறது
நன்மை: சந்தா கட்டணம் இல்லை, துடிப்பான பயனர்களின் சமூககுழுவுடன் இணைந்து பணியாற்றும் திறன், ஏராளமான சாத்தியக்கூறுகள் கொண்ட அற்புதமான திறமூல செயல்திட்டங்களை கொண்டது
பாதகம்: கூடுதல் செலவுகள் (hosting) , குறைந்த குறிமுறைவரிகளின் இயங்குதளம், ஆனால் ஒரு சிறந்த தொழில்நுட்ப பின்னணி தேவை., முதன்மையாக மேம்படுத்துநர்களுக்கு வழங்குகிறது

7. Huginn -என்பது குறைந்த குறிமுறைவரிகளின் தானியங்கி தளமாகும் .Huginn என்பது Zapier , Integromat போன்ற ஒரு தானியங்கி குறைந்த-குறிமுறைவரிகளின் தளமாகும். முக்கியமான வேறுபாடு என்னவென்றால், Huginn ஆனது திறமூல தளமாகும். Github இல் 30,000 க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் மிகவும் சுறுசுறுப்பான சமூககுழுவுடன் செயல்படுகின்றது, Huginn ஒரு குறைந்த-குறிமுறைவரிகின் தானியங்கி தளத்தைத் தேர்ந்தெடுக்கும்போது ஒரு திடமான தெளிவான பந்தயமாகின்றது. Huginn’s Agents இயக்கிய ஒருவரைபடத்தின் மூலம் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வுகளை உருவாக்கி பயனடைகின்றனர்.
பயனர்கள் Huginn உடன் செய்யக்கூடிய சில செயல்கள், Basecamp, Slack, Twilio போன்ற பலவற்றை உள்ளடக்கிய பல பயன்பாடுகளுடன் இணைக்க வானிலை புதுப்பிப்புகளுடன் மின்னஞ்சல்களைப் பெறுவது ஆகியன அடங்கும்.
Github Repo Github நட்சத்திரங்கள் – 31.4k செயலில் பராமரிக்கப்படுகிறது.

8.WordPress என்பது இணையதளங்களை உருவாக்குவதற்கான திறமூல குறைந்த-குறிமுறைவரிகளின் தளம். இது இணையதளபக்கங்களை உருவாக்குவிதற்கான முன்னணியிலுள்ள குறைந்த-குறிமுறைவரிகளின் தளமாகும். இன்று,இது இணையத்தில் எளிய வலைப்பதிவுகள் முதல் நிறுவன வலைத்தளங்கள் வரை. 41% க்கும் அதிகமான அளவு பயன்படுத்திகொள்ளப்படுகிறது –
WordPress இன் புகழ் அதன் எளிமையான, நீட்டிக்கக்கூடிய தளம் , அதன் செருகுநிரல்/ மாதிரிபலகம் சுற்றுச்சூழல்( ecosystem) அமைப்பு ஆகியன அடிப்படை காரணிகளாக உள்ளது. 54,000 க்கும் மேற்பட்ட செருகுநிரல்களுடன், குறிமுறை வரிகளை எழுதாமலேயே இதனுடைய தனிப்பயனாக்கத்தின் நிலை நம்பமுடியாதது. வளர்ந்து வரும் சமூகம், பிரபலமான செருகுநிரல்/மாதிரிபலக சுற்றுச்சூழல் அமைப்பு , பயன்படுத்த எளிதான தளம் ஆகியவை இது உலகின் முன்னணி CMS தளமாக திகழ்வதற்கு காரணிகளாக விளங்குகின்றன.
Github repoGithub நட்சத்திரங்கள் – 15k செயலில் பராமரிக்கப்படுகிறது

9. Node-Red என்பதுநிகழ்வு-உந்துதல் / IoT பயன்பாடுகளை உருவாக்குவதற்கான திற மூல குறைந்த-குறிமுறைவரிகளின் தளமாகும் .Node-RED என்பது வன்பொருள் சாதனங்கள், APIகள் ,இணைய சேவைகளை ஆகியவற்றை ஒன்றாக இணைக்கும் ஒரு நிரலாக்க கருவியாகும். இது ஒரு இணையஉலாவி அடிப்படையிலான வரைகலை பயனாள் இடைமுகத்தினை(GUI) வழங்குகிறது, இது ஒரே சொடுக்குதலில் அதன் இயக்க நேரத்திற்கு பயன்படுத்தக்கூடிய பாய்வுகளை உருவாக்க முனைமங்களை இணைப்பதை எளிதாக்குகிறது. இது IoT பயன் பாடுகளை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த தீர்வாக அமைந்துள்ளது, மேலும் Raspberry Pi, BeagleBone Boards , ஆண்ட்ராய்டு ஆகியவைகளுக்கு அர்ப்பணிக்கப் பட்ட முனைமங்களுடன் வெளிவருகிறது.
Github Repo Github நட்சத்திரங்கள் – 12.1k செயலில் பராமரிக்கப்படுகிறது.

10.PyCaret என்பது திறமூல குறைந்த குறிமுறைவரிகளின் இயங்குதளமான பைதானின் இயந்திர கற்றல்தளமாகும். PyCaret என்பது பைத்தானில் உள்ள ஒரு திறமூல, குறைந்த-குறிமுறைவரிகளின் இயந்திர கற்றல் நூலகமாகவும் திகழ்கின்றது, இது கருதுகோளிலிருந்து நுண்ணறிவு வரை சுழற்சி நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. PyCaret ஆனது தரவு விஞ்ஞானிகளுக்கு மிகவும் பொருத்தமானது. முந்தைய தரவு அறிவியல் அனுபவம் இல்லாத மேம்படு்த்துநர்கள் தொடங்குவதற்கு தளமானது சவாலாக இருக்கலாம். இதனுடைய ஆவணங்கள் வியக்கத்தக்க வகையில் சிறப்பாக உள்ளன பயன்படுத்தி கொள்வதற்கான பல பயிற்சிகளும் இதில் உள்ளன.
Github Repo Github நட்சத்திரங்கள் – 3.4k செயலில் பராமரிக்கப்படுகிறது

முடிவுரை
குறிமுறைவரிகளில்லாத அல்லது குறைந்த குறிமுறைவரிகளின் கருவிகளின் முக்கிய வசதி என்னவென்றால், வணிக பயன்பாடுகள், chatbots, பகுப்பாய்வுகள், தானியங்கிகள், தரவுத்தளங்கள் அல்லது இணையபயன்பாடுகள் ஆகியவற்றிற்குப் பல குறிமுறைவரிகளில்லாத NoCode கருவிகள் பயன்படுத்திகொள்ளப்படுகின்றன. இதிலுள்ள வாய்ப்புகள் கிட்டத்தட்ட வரம்பற்றவை. “குறிமுறைவரிகளில்லாத (NoCode) என்பதே குறிமுறைவரிகளின் எதிர்காலமாகும்” என்பதற்கு நாம் உடன்பட வேண்டும்.
திறமூல குறைந்த குறிமுறைவரிகளின் தளத்தின் மூலம் இன்றும் நாளையும் என்ன கருவிகளை உருவாக்க விரும்புகின்றோம் என்பதைப் பற்றி சிந்திப்பது அல்லது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. விரிவாக்கம் மிகவும் முக்கியமானது எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்ககூடும். எந்தவொரு கருவியையும் தேர்ந்தெடுக்கும்போது இதைக் கவனத்தில் கொள்ள முயற்த்திடுக, திறமூல குறைந்த-குறிமுறைவரிகளின் பயணத்திற்கு வாழ்த்துக்கள்!

%d bloggers like this: