எழுத்தாளர்களுக்கு உதவிடும் ஆண்ட்ராய்டின் கட்டற்ற பயன்பாடுகள்

வலைபூக்களிலும் ,சமூதாய இணையதளங்களிலும் மின்புத்தகங்களிலும் தத்தமது கருத்துகளை எழுதி வெளியிடுவதற்கு எழுத்தாளர்கள் கணினிக்கு பதிலாக தங்களுடைய கைபேசி வாயிலாகவே எழுதவிரும்புகின்றனர் அவ்வாறு கைபேசி வாயிலாக எழுதுவதற்காக அதிலும் ஆண்ட்ராய்டு சாதனங்களின் வாயிலாக எழுதுவதற்கு உதவிடுவதற்காக பின்வரும் ஆண்ட்ராய்டின் கட்டற்ற பயன்பாடுகள் பேருதவியாய் இருக்கின்றன

1. Markor எனும் ஆண்ட்ராய்டின்கட்டற்ற பயன்பாடானது எளிய நெகிழ்வுதன்மையுடன் கூடிய உரைபதிப்பானாக விளங்குகின்றது இந்த பயன்பாட்டினை செயல்படுத்தியவுடன் தோன்றிடும் திரையில் new document எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின்விரியும் புதிய உரைபதிப்பான் திரையில் நம்முடைய கருத்துகளை உள்ளீடு செய்திட துவங்கிடலாம் அதன்பின்னர் நாமே முயன்றும் அல்லது கருவிகளின் பட்டியில் உள்ள கருவிகளை சொடுக்குதல் செய்தும் உரைஆவணத்தினை வடிவமைப்பு செய்திடலாம் மேலும் நம்முடைய உரைஆவணமானது நம்முடைய கைபேசியில் அல்லது திறன்பேசியில் இவைகளின் கோப்பு வடிவமைப்பில் தானாகவே சேமித்து கொள்கின்றது இவ்வாறு ஆவணத்தினை சேமித்திடும்போது கைபேசியில் அதற்கான நினைவக வசதி பத்தாது என்ற நிலையில் நாம் விரும்பினால் Nextcloud எனும் பகுதியில்கூட சேமித்து கொள்ளமுடியும் நம்முடைய உரையை எழுதிமுடித்தபின்னர் அதனை முன்காட்சியாக காணும் வசதியும் இதில் உள்ளது அதுமட்டுமல்லாது நாம் செய்யவேண்டிய செயல்களை Todo.txt எனும் வசதியின் வாயிலாக பட்டியலாக செய்து கொள்ளமுடியும். ஆய்வாளர்கள் தங்களுடைய செயல்திட்டத்திற்கான மேற்கோள்குறிகளை எளிதாக இதில் செய்து கொள்ளமுடியும். மிகமுக்கியமாக நாம் உருவாக்கிய உரைவடிவிலான ஆவணத்தினை மற்றநண்பர்கள் எளிதாக படித்தறியும் வண்ணம் HTML அல்லது PDF வடிவமைப்புகளில் மேலேற்றம் செய்து கொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கு gsantner.net/project/markor.html எனும் இணைய பக்கத்திற்கு செல்க

2. Orgzly எனும் ஆண்ட்ராய்டின்கட்டற்ற பயன்பாடானது மடிக்கணினியில் பயன்படுத்தப்படும் Emacs , Org modeஆகிய வடிவமைப்பினை போன்று கைபேசியில் பயன்படுத்தி கொள்ள பேருவியாக உள்ளது அதாவது Emacs இன் வடிவமைப்பை கற்றறிந்த குருவினிடம்தான் கற்றுகொண்டு பயன்படுத்தமுடியும் என்ற கட்டாயம் எதுவும் இல்லாமல் யார்வேண்டுமானாலும் இதில் new notebook எனும் புதிய உரைஆவணத்தினை துவங்கி இந்த Orgzly எனும் ஆண்ட்ராய்டின் கட்டற்ற பயன்பாட்டினை கொண்டு எளிதாக அதே வடிவமைப்பின தங்களுடைய கைபேசியிலேயே கொண்டுவரலாம் அதனோடுகூடவே நாம் செய்யவேண்டிய செயல்களை task lists எனும் வசதியின் வாயிலாக பட்டியலாக செய்து கொள்ளமுடியும்.மேலும் விவரங்களுக்கு எனும் இணைய பக்கத்திற்கு செல்க

3 Carnet குறிப்புகள் எடுக்க விரும்புவோர் இந்த ஆண்ட்ராய்டின்கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்ளலாம் அவ்வாறு குறிப்புகள் எடுத்து முடித்த பின்னர் எழுத்துருக்களின் வண்ணம், அளவு ,இடவமைவு ஆகியவற்றை நாம் விரும்பியவாறு வடிவமைத்துகொள்ளமுடியும் மிகமுக்கியமாக குறிப்புகளுக்கு இடையில் தேவையானவாறு உருவப்படங்களை உள்ளிணைத்து கொள்ளமுடியும் அதனோடு கைபேசியில் நம்முடைய உரை ஆவணத்தினை சேமித்திட முயன்றிடும்போது போதுமான நினைவக வசதி இல்லை என்ற நிலையில் நாம் விரும்பினால் Markor போன்றுNext cloud எனும் பகுதியில்கூட சேமித்து கொள்ளமுடியும் மேலும் விவரங்களுக்கு f-droid.org/en/packages/com.spisoft.quicknote/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க

4 கைபேசிகளில் அல்லது திறன்பேசிகளில் உரைஆவணத்தினை உருவாக்க விழைபவர்கள் கணினிபோன்று விசைப்பலகையில் உரையை உள்ளீடுசெய்வதற்காக புளூடூத் வாயிலாக செயல்படும் விசைப்பலகையை பயன்படுத்திடுவார்கள் அதற்கு பதிலாக Anysoft Keyboard எனும் ஆண்ட்ராய்டின் கட்டற்ற பயன்பாட்டின் வாயிலாக Dvorak, Colemak, Workman, Halmak ஆகிய வடிவமைப்பு விசைப்பலகைகளில் ஒன்றினை தெரிவுசெய்து பயன்படுத்தி கொள்க என பரிந்துரைக்கப்படுகின்றது அதைவிட ஆங்கிலம் தவிர்த்த தமிழ் போன்ற மொழியில் விசைப்பலகையை உள்ளீடு செய்திடஇது ஆதரிக்கின்றது என்ற செய்தியை மனதில் கொள்கமேலும் விவரங்களுக்கு anysoftkeyboard.github.io/ எனும் இணைய பக்கத்திற்கு செல்க

%d bloggers like this: