எளிய தமிழில் WordPress- 17

அமைப்புகள்

Settings எனும் அமைப்புகள் மூலம் நமது WordPress வலைப்பக்கத்தில் சில கட்டுப்பாடுகளை மாற்றியமைப்பது குறித்து இனி பார்க்கலாம்.

முதலாவது

General Settings:

தளத்தின் தலைப்பு, Tagline, தளம் இயங்கும் தேதி, நேர வரைவுகள் உள்பட சில அடிப்படையான பொதுவான திருத்தங்கள் செய்யலாம்.

gset

Writing Settings:

இதில் இயல்பாக வரவேண்டிய வகையை (அதாவது இயல்பாக uncategoried இருக்கும். மாற்ற வேண்டுமெனில்) மாற்றலாம்.

தவிர சில எழுதும் வரைவுகளை (Post Standards) மாற்ற இயலும்.

wset

Reading Settings:

இதில் உங்கள் தளம் எப்படி காட்சி தரவேண்டும் என நீங்கள் வடிவமைக்க முடியும். எத்தனை பதிவுகள் காட்சி தரவேண்டும். முழுமையாகவா, பகுதியாகவா எவ்வாறு பதிவுகள் காட்சி தர வேண்டும் என்றும் உங்கள் தளத்தின் முகப்பு பக்கம் எவ்வாறு காட்சி தர வேண்டுமென்றும் தீர்மானிக்க இந்த அமைப்புகள் உதவும். (சுருங்கச் சொன்னால் புதிதாக உங்கள் தளத்தைப் பார்வையிடுபவருக்கு உங்கள் தளத்தின் முகப்பு பக்கம் எவ்வாறு காட்சியளிக்க வேண்டுமென இப்பக்கம் தீர்மானிக்கும்.)

rset

Discussion Settings:

இப்பக்கத்தில் பக்கங்களின் உரலி செயல்பாடுகளை பற்றியும், பக்கங்களின் கமெண்ட்கள் குறித்தும் சில அமைப்புகளை மாற்றியமைக்கலாம். அதாவது யாரெல்லாம் கருத்து சொல்லலாம். குறிப்பிட்ட பதிவின் பின்னூட்டங்களை எத்தனை நாட்கள் அனுமதிக்கலாம்; உடனடியாக வாசிப்பவர் கருத்துக்களை அனுமதிக்கலாமா வேண்டாமா; கருத்துக்களில் எந்தெந்த வார்த்தை வந்தால் உங்களுக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும் என்கிற மாதிரி பல்வேறு அமைப்புகள் இப்பக்கத்தில் உண்டு.

discussion

Media Settings:

ஊடகங்கள் எனப்படும் படங்கள் எந்த அளவில் தளத்தில் காட்சி தர வேண்டுமென்றும், எவ்வாறு ஊடகத் தொகுப்பில் படங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்றும் தேர்ந்தெடுக்க இப்பக்கம் உதவும்.

media

Permalink Settings:

உங்கள் தளத்தின் உரலி எவ்வாறு மற்றவர்களுக்கு காட்சி தர வேண்டுமென இப்பக்கத்தில் பல்வேறு வகைகள் காட்டப்பட்டிருக்கும். அவற்றுள் ஒன்றினை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். வகைகள் – வகைச் சொற்களுக்கான அடிப்படை உரலி (Base url) எவ்வாறு காட்சி தரவேண்டும் எனவும் இப்பக்கத்தில் தீர்மானிக்கலாம்.

permalinks

[இதர அமைப்புகள் குறித்த விளக்கங்கள் தவிர்க்கப்படுகின்றன.]

 

முடிந்தது.

நன்றி.

 

%d bloggers like this: