அறிமுகம்

இலக்குகள்

  • கட்டற்ற கணிநுட்பத்தின் எளிய விஷயங்கள் தொடங்கி அதிநுட்பமான அம்சங்கள் வரை அறிந்திட விழையும் எவருக்கும் தேவையான தகவல்களை தொடர்ச்சியாகத் தரும் தளமாய் உருபெறுவது.
  • உரை, ஒலி, ஒளி என பல்லூடக வகைகளிலும் விவரங்களை தருவது.
  • இத்துறையின் நிகழ்வுகளை எடுத்துரைப்பது.
  • எவரும் பங்களிக்க ஏதுவாய் யாவருக்குமான நெறியில் விவரங்களை வழங்குவது.
  • அச்சு வடிவிலும், புத்தகங்களாகவும், வட்டுக்களாகவும் விவரங்களை வெளியிடுவது.

பங்களிக்க

  • விருப்பமுள்ள எவரும் பங்களிக்கலாம்.
  • கட்டற்ற கணிநுட்பம் சார்ந்த விஷயமாக இருத்தல் வேண்டும்.
  • பகிர்வதை கட்டுப்படுத்தாத வண்ணம் படைப்புகள் இருத்தல் அவசியம். உதாரணத்திற்கு காபிலெப்ட்  & கிரியேடிவ் காமன்ஸ்.
  • தாங்கள் பங்களிக்க விரும்பும் ஒரு பகுதியில் வேறொருவர் ஏற்கனவே பங்களித்து வருகிறார் எனின் அவருடன் இணைந்து பணியாற்ற முனையவும்.
  • கட்டுரைகள் மொழிபெயர்ப்புகளாகவும், விஷயமறிந்த ஒருவர் சொல்லக் கேட்டு கற்று இயற்றப்பட்டவையாகவும் இருக்கலாம்.
  • படைப்புகள் தொடர்களாகவும் இருக்கலாம்.
  • தொழில் நுட்பம், கொள்கை விளக்கம், பிரச்சாரம், கதை, கேலிச்சித்திரம், நையாண்டி எனப் பலசுவைகளிலும் இத்துறைக்கு பொருந்தும்படியான ஆக்கங்களாக இருக்கலாம்.
  • தங்களுக்கு இயல்பான எந்தவொரு நடையிலும் எழுதலாம்.
  • தங்களது படைப்புகளை எளியதொரு உரை ஆவணமாக editor@kaniyam.com முகவரிக்குஅனுப்பிவைக்கவும்.
  • தள பராமரிப்பு, ஆதரவளித்தல் உள்ளிட்ட ஏனைய விதங்களிலும் பங்களிக்கலாம்.
  • ஐயங்களிருப்பின் editor@kaniyam.com மடலியற்றவும்.

விண்ணப்பங்கள்

  • கணித் தொழில்நுட்பத்தை அறிய விழையும் மக்களுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சியாகும் இது.
  • இதில பங்களிக்க தாங்கள் அதிநுட்ப ஆற்றல் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
  • தங்களுக்கு தெரிந்த விஷயத்தை இயன்ற எளிய முறையில் எடுத்துரைக்க ஆர்வம் இருந்தால் போதும்.
  • இதன் வளர்ச்சி நம் ஒவ்வொருவரின் கையிலுமே உள்ளது.
  • குறைகளிலிருப்பின் முறையாக தெரியப்படுத்தி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கவும்.

வெளியீட்டு விவரம்

பொறுப்பு: சீனிவாசன். ஆதரவு: ஆமாச்சு இன்பிராசாப்ட் சர்வீஸஸ். கணியத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் குறிப்பிட்டு குறிப்பிடப்படாத வரையில் அதனை படைத்தவருக்கே உரித்தாகும்.

முக்கிய அறிவிப்பு

கணியம் கட்டற்ற மென்பொருள் தொடர்பான விஷயங்களை தொழில் நோக்கோடு மாதந்தோறும் பதிப்பித்து வெளியிட வேண்டி, ம. ஸ்ரீ ராமதாஸ் பெயரில் பதியப்பெற்று முறையான அனுமதிக்காக காத்திருக்கும் பெயராகும். பெயருடைமை: ம. ஸ்ரீ ராமதாஸ்

ஆசிரியர் குழு.

One thought on “அறிமுகம்

  1. நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மிகவும் சிறப்பான ஒரு முயற்சி. சீனிவாசன் மற்றும் அமாச்சுவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். என்னால் முடிந்த வரை நான் கணியத்திற்குப் பங்களிப்பேன் என உறுதி கூறுகிறேன். நன்றி – பாலாஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>