எளிய தமிழில் WordPress – 4

எளிய தமிழில் WordPress – 4

 

பதிவுகள்

பதிவுகள் எழுதத்தானே தளங்களைத் தொடங்குகிறோம். வெளிப்புற வடிவமைப்புகளைப் பற்றி கடந்த மாதங்களில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, இப்போது பதிவுகள் எழுதுவது.

பதிவுகள் எழுதுவதில் Content உங்கள் விருப்பம். அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த Content எப்படி தளத்தில் உள்ளிடப்பட வேண்டும் என்பதை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

உங்கள் Dashboard-ல் Posts எனும் இணைப்பைக் கிளிக்கினால் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல ஒரு Window வரும்.

உங்கள் பதிவுகளை திருத்திய வரிசைப்படி காட்டும் பகுதியே இது. இதில் பதிவின் தலைப்பு (Title), எழுதியவர் (Author), வகைகள் (Categories), வகைச்சொற்கள் (Tags), பதிவில் இடம்பெற்ற மறுமொழிகளின் எண்ணிக்கை (No. of comments), பதிவின் தற்போதைய நிலை (Status), திருத்தியமைக்கப்பட்ட தேதி (Date) ஆகியவை அட்டவணை வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும்.

பதிவின் தற்போதைய நிலை என்பதில் வெளியிடப்பட்டவை (Published), அட்டவணைப்படுத்தப்பட்டவை (Scheduled), வெளியிடப்படாதவை (Drafts) என்ற பிரிவுகளும் அடக்கம்.

அட்டவணை வடிவில் அமைந்த பட்டியலில் ஒவ்வொரு பதிவின் கீழும் கீழ்கண்ட தேர்வுகள் (Options) இருக்கும். அது குறித்து விரிவாக…

 

  • தொகு (Edit) : முழுமையாக (அல்லது வசதியாக) தொகுக்க உதவும் தேர்வு இது
  • விரைவாக தொகு (Quick edit) : சில குறிப்பிட்ட விடயங்களை மட்டும் (Date, Title, Author, etc ) தொகுக்க உதவும் தேர்வு இது.
  • குப்பை (Trash) : வழக்கமாகப் பயன்படுத்தும் நீக்குதலுக்கான (Delete) தேர்வு இது. (முழுப் பதிவையுமே நீக்கிவிட முடியும்!)
  • பார் (view) : மாற்றங்கள் முடிந்த பின்னரோ, பதிவிடும் முன்னரோ, பதிவிட்ட பின்னரோ பதிவைப் பார்வையிட உதவும் தேர்வு இது.

இன்னும் நிறைய படிக்கலாம்….இன்னொரு பதிவில்

 

தமிழ்
<iamthamizh@gmail.com>
@iamthamizh
thamizhg.wordpress.com

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: