ஜாவா படிக்க, தமிழில் இலவசக் காணொலிகள்

ஜாவா – ஓப்பன்ஜேடிகே(OpenJDK) வெளியிட்டு வரும் ஒரு கட்டற்ற மொழியாகும்.  பல்வேறு மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படும் வலிமையான மொழியாக அறியப்படும் ஜாவாவை இலவசமாக, கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் பயிலகம் – தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.  அவற்றுக்கான இணைப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.  நிரலாக்கத்திற்குப் புதியவர்கள், மாணவர்கள் ஜாவாவில் நல்ல தேர்ச்சி பெற இவை உதவும்….
Read more

பல Git கணக்குளை ஒரே கணினியிலிருந்து இயக்குதல் ! 

அன்புடையீர் வணக்கம் இந்த பதிவில் நாம் நிரலாக்கர்களின் இரண்டு பொதுவான செயல்பாடுகளை தானியங்க வைப்போம். நம்மிடம் பல Git கணக்குகள் இருக்கும் நிலையில் ஒரே கணினியில் இருந்து, 1. பயனர்பெயர், கடவுச்சொல் உள்ளீடு தானகவே நடத்தும்படி இயக்குவது. 2. பயனர் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி repository கு ஏற்றவாறு அமைத்தல் நிரலாக்கர்கள் தன்னுடைய தினம்தோறும்…
Read more

gretl எனும் பயன்பாடு ஒருஅறிமுகம்

gretlஎன சுருக்கமாக அழைக்கப்படும் குனு பின்னடைவு, பொருளாதார அளவியல் கால–தொடர்களின் நூலகம் (Gnu Regression, Econometrics and Time-series Library)என்பது சி நிரலாக்க மொழியில் எழுதப்பட்ட பொருளாதார அளவீட்டு பகுப்பாய்விற்கான ஒரு குறுக்கு–தள பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு ஆகும். இது இலவசமென்பொருள் அறக்கட்டளையால் வெளியிடப்பட்ட தொரு இலவச, திற மூல பயன்பாட்டு மென்பொருளாகும் . இது…
Read more

எளிய தமிழில் IoT 15. தரக் கட்டுப்பாடும் தர உறுதியும்

சந்தையில் போட்டிபோட்டு விற்பனை செய்வதற்கு நிறுவனங்கள் உத்தரவாதம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு பாகம் தரக்குறைவாக இருந்து உடைந்து விட்டால் இலவசமாக மாற்றிக் கொடுக்க (warranty claims) வேண்டிவரும். மேலும், தொழிற்சாலையிலேயே பாகங்கள் தரக்கட்டுப்பாட்டில் நிராகரிக்கப்பட்டால் (rejection) அல்லது மறுசெயற்பாட்டுக்கு (rework) அனுப்ப வேண்டி வந்தால் வீண் செலவுதானே. இம்மாதிரி நிராகரிப்புகள், மறுசெயல்பாடுகள் மற்றும் உத்தரவாத காலத்தில்…
Read more

ஜிட்சி – வீடியோ கான்பிரன்சிங் – இலவச கட்டற்ற மென்பொருள்

ஜிப்சி – இராஜூ முருகன் இயக்கத்தில் அண்மையில் வெளி வந்த படம். படத்தின் நாயகன் ஊர் ஊராக நாடோடி வாழ்க்கை வாழ்பவன். அதனால் ஜிப்சி என்று பெயர் வைத்திருப்பார் இராஜூ முருகன். கொரோனா சூழ் இன்றைய சூழலில் யாராலும் ஜிப்சியாகத் திரிய முடியாது. ஒன்றிய அரசின் 21 நாள் ஊரடங்கு உத்தரவு – ஊரையே உள்ளே…
Read more

ராஸ்பெர்ரி பைக்கான (Raspberry Pi ) ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல்கள் (IDEs)

இது ஒருமென்பொருட்களின் தொகுப்பாகும், இது புதியமென்பொருளை எழுதவும் பரிசோதித்து பார்க்கவும் தேவையான அடிப்படை கருவிகளை வழங்குகின்றது. மென்பொருளை உருவாக்குவதற்கு தேவையான குறிமுறைவரிகளை எழுதவும் பரிசோதிக்க உதவும் கருவிகள் மேம்படுத்துநர்களுக்கு தேவை,யாகும் மேலும் இவை பெரும்பாலும் பல்வேறு நூலகங்களையும் குறிமுறைவரிகளின் பதிப்பாளர்களை உள்ளடக்குகின்றன. ராஸ்பெர்ரி பை என்பது ஒரு சிறிய கணினி ஆகும், இது பள்ளிகளில் குழந்தைகள்…
Read more

எளிய தமிழில் IoT 14. சோதனைகள் செய்யத் திறந்த வன்பொருட்கள்

நாம் முழுத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன் குறைந்த செலவில் கருத்துருவை நிரூபிக்க (proof-of-concept) முடிந்தால் நல்லது. இதற்கு வன்பொருட்கள் குறைந்த விலையில் இருக்க வேண்டும். மேலும் மற்றவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வு காண்கிறார்கள் என்று தெரிந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மன்றங்களில் நாம் கேள்வி கேட்டால் பதில் கிடைக்கவும் வாய்ப்புள்ளது….
Read more

COVID-19 எனும் கொரோனா நச்சுயிரை எதிர்த்து போராடும் திறமூல வன்பொருள் செயல்திட்டங்கள்

தற்போது உலகமுழுவதும் வாழும் மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற COVID-19எனும் கொரோனா நச்சுயிரைஎதிர்த்துபோராடுவதற்காகபின்வரும் திறமூல வன்பொருள்கூட உதவதயாராக இருக்கின்றன . Opentrons இந்த திற மூல ஆய்வக தானியங்கிதளமானது திற மூல வன்பொருள், சரிபார்க்கப்பட்ட ஆய்வக உபகரணங்கள், நுகர்பொருட்கள், உதிரிபாகங்கள் பணிநிலையங்கள் ஆகியவற்றின் தொகுப்பைக் கொண்டுள்ளது. நாளொன்றிற்கு 2,400 பரிசோதனைகள் வரை தானியங்கியாக செயல்படுத்தக்கூடிய அமைப்புகளுடன் அதன்…
Read more

எளிய தமிழில் IoT – 13. இயங்குதளங்கள் (Operating systems – OS)

IoT சாதனங்கள் வளங்கள் குறைந்த சாதனங்கள் (resource Constrained devices) என்று முன்னரே பார்த்தோம். நாம் கணினிகளில் பயன்படுத்தும் இயங்குதளங்கள் வளங்களை மிக தாராளமாகவே பயன்படுத்துபவை. கொஞ்சம் பழைய கணினிகளில் புது வெளியீடு இயங்குதளங்கள் திணறுவதை நாம் பார்க்கிறோம். கணிப்பியின் வேகம் மற்றும் நினைவகத்தின் அளவு அவற்றுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. ஆகவே IoT சாதனங்களில் இவற்றைப்…
Read more

எளிய தமிழில் Deep Learning – தொழில்நுட்பம் – து. நித்யா

நூல் : எளிய தமிழில் Deep Learning ஆசிரியர் : து. நித்யா மின்னஞ்சல் : nithyadurai87@gmail.com அட்டைப்படம் : லெனின் குருசாமி guruleninn@gmail.com மின்னூலாக்கம் : த.சீனிவாசன் மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com வெளியிடு : FreeTamilEbooks.com உரிமை : CC-BY-SA உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.